90ml teaser: டீசரைப் பார்த்துட்டு ஓவியா ஆர்மில இருந்து ரிசைன் பண்ணுனவங்க எல்லாம் கையத் தூக்குங்க!

ஓவியாவின் 90 எம்எல் படம் குறித்து டிவிட்டரில் பெரும் விவாதமே நடைபெற்று கொண்டிருக்கிறது.

Recommended Video

அனிதா உதீப் இயக்கத்தில் ஓவியா நடித்த 90 எம் எல் படத்தின் டீசர்-வீடியோ

சென்னை: ஓவியாவின் 90 எம்எல் படத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஓவியா நடிப்பில் அனிதா உதீப் இயக்கியிருக்கும் படம் 90 எம்எல். இப்படத்தின் டீசர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்திற்கு ஏ சான்று கிடைத்துள்ள போதிலும், இருட்டு அறையில் முரட்டு குத்து, ஹர ஹர மகாதேவகி போன்ற படங்களையே தூக்கி சாப்பிடும் வகையில் இருக்கிறது இப்படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகளும், வசனங்களும்.

டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இப்படத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் விமர்சனங்கள் வந்தவண்ணம் உள்ளன.

முதிர்ச்சியானவர்களுக்கு மட்டும்

"இந்த படத்தை வயதில் மூத்தவர்களும், குறிப்பாக முதிர்ச்சி உள்ளவர்களும் மட்டுமே பார்க்க வேண்டும். அப்போது தான் தாங்கள் யாருக்கும் அடிமைபடாமல், நாயகர், நாயகியர் சொல்லுவதை அப்படியே கேட்டு நடக்காமல் இருப்பர்", என இவர் தெரிவித்துள்ளார்.

கணவர் தான் பார்க்க சொன்னார்

"90 எம்எல் டீசரை பார்க்கும்படி எனது கணவர் வற்புறுத்தினார். பிறகு அவரை கெஸ்ட் ரூமுக்கு அனுப்பிவிட்டேன். இனிமேல் அவர் படுக்கை அங்கு தான் ", என குறிப்பிட்டுள்ளார் இவர்.

ஓவியா பண்ணதெல்லாம்

"90 எம்எல்ல ஓவியா பண்ணத ஒரு ஹீரோ பண்ணிருந்தா யாருமே கவலை பட்டிருக்கமாட்டாங்க. ஆனால் ஒரு ஹீரோயின் அதை பண்ணியதால் எல்லோரும் அவரை தரக்குறைவாக பேசுகிறீர்கள். இது தான் இரட்டை நிலைபாடு", என இவர் பதிவிட்டுள்ளார்.

படம் பார்க்காம

"படம் பார்க்காம பேசிட்டீங்களே சகோதரா. படம் வெளியானதும் உங்கள் மனநிலைமாறும். பொறுத்திருந்து பாருங்கள். பசங்க வெச்சு ஷங்கர் ஒரு பாய்ஸ் எடுக்கும் போது, ஒரு பெண் இயக்குனர் பெண்களை வைத்து 90 எம்எல் எடுக்கக்கூடாதா", என வினவியுள்ளார் இவர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X