BiggBoss3- என்ன கமல் சார், இப்படி வாய் கூசாமல் பொய் பேசுறீங்க!
Recommended Video
சென்னை: பிக் பாஸ் 3 ப்ரொமோ வீடியோவை பார்த்தவர்கள் கமல் ஹாஸன் என்ன இப்படி அநியாயத்திற்கு பொய் பேசுகிறாரே என்று விமர்சித்துள்ளனர்.
பிக் பாஸ் 3 நிகழ்ச்சி இன்று இரவு 8 மணிக்கு துவங்க உள்ளது. முதல் 2 சீசன்களை போன்று இந்த சீசனையும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான கமல் ஹாஸன் தான் தொகுத்து வழங்குகிறார்.
நிகழ்ச்சி துவங்க உள்ள நிலையில் இன்று மூன்று ப்ரொமோ வீடியோக்கள் வெளியாகியுள்ளன. அதில் ஒரு வீடியோவில் கமல் ஏற்கனவே சொன்னதை தான் திரும்பச் சொல்லியுள்ளார்.
வாழ்க்கை
பிக் பாஸ் இது வெறும் ஷோ அல்ல நம்ம வாழ்க்கை இன்று இரவு துவங்குகிறது என்று ப்ரொமோ வீடியோவில் கமல் ஹாஸன் கூறியதை பார்த்து தான் நெட்டிசன்கள் கமெண்ட் அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
பணம்
கமல் சார் பிக் பாஸ் என்பது எங்களுக்கு எல்லாம் வெறும் பொழுதுபோக்கு நிகழ்ச்சி, அவ்வளவு தான். உங்களுக்கும், அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களுக்கும் பணம் கிடைப்பதால் அது உங்களுக்கு தான் வாழ்க்கை. தயவு செய்து பிக் பாஸ் நிகழ்ச்சி வெறும் ஷோ அல்ல என்று மட்டும் மீண்டும் கூறாதீர்கள் என்று நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.
தண்ணீர்
தமிழகத்தில் அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னையில் மக்கள் குடிக்கக் கூட தண்ணீர் இல்லாமல் அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு அரசியல் கட்சியின் தலைவராக இருந்து கொண்டு இந்த நேரத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியை போய் உங்களின் லைஃப் என்று சொல்லலாமா ஆண்டவரே என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கிரிக்கெட் போட்டி
கமல் ஹாஸனை நெட்டிசன்கள் விமர்சித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ரசிகர்களோ அட, சோதிக்காதீங்கய்யா நாங்க மேட்ச்சை பார்ப்பதா இல்லை பிக் பாஸ் 3 நிகழ்ச்சியை பார்ப்பதா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











