அடேய்.. என்னடா இதெல்லாம்.. ஆடவிட்டு வேடிக்கை காட்றீங்களா.. பிக்பாஸ் புரமோவால் அப்செட்டான ரசிகாஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய புரமோவை பார்த்த நெட்டிசன்கள் ரொம்பவே அப்செட்டாகியுள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சி படு சுவாரசியமாக சென்று கொண்டிக்கிறது. இதுவரை நடந்த சீசன்களை காட்டிலும் இந்த சீசன் செம இன்ட்ரெஸ்ட்டிங்காக உள்ளது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சி இவ்வளவு சுவாரசியமாக செல்வதற்கு காரணம் மூத்த நடிகரான சுரேஷ் சக்கரவர்த்திதான்.

புறம்பேசாமல்..
பிக்பாஸ் வீட்டில் கடந்த சீசன் போட்டியாளர்களை காட்டிலும் மிகவும் நேர்த்தியாக ஜென்டில்மேன் கேம் ஆடி வருகின்றார் சுரேஷ் சக்கரவர்த்தி. யாரைப் பற்றியும் புறம்பேசாமல் எல்லாவற்றையும் ஸ்போர்ட்டிவாக எடுத்துக்கொண்டு செயல்பட்டு வருகிறார்.

மரியாதைக் குறைவாக
ஆனால் ஹவுஸ்மேட்ஸ்கள் அவரை தவறாக புரிந்து கொண்டு டார்கெட் செய்து வருகின்றனர். குறிப்பாக அனிதா சம்பத், ரியோ ராஜ் மற்றும் சனம் ஷெட்டி ஆகியோர் சுரேஷ் சக்கரவர்த்தியிடம் மரியாதைக் குறைவாக நடந்து கொண்டு பெரும் வெறுப்பை சம்பாதித்து வருகின்றனர்.

முதல் புரமோ
இதுவே நிகழ்ச்சியின் சுவாரசியத்துக் காரணமாகவும் உள்ளது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோ வெளியாகியுள்ளது. அதில் சண்டைக்கோழிகளான அனிதா சம்பத்தும் சுரேஷ் சக்கரவர்த்தியும் சின்ன மச்சான் பாடலுக்கு டான்ஸ் ஆடியுள்ளனர்.

நெட்டிசன்ஸ் அப்செட்
இதனை மொத்த ஹவுஸ்மேட்டுகளும் என்ஜாய் செய்கின்றனர். நேற்று நடந்த சம்பவங்களை தொடர்ந்து இன்றும் பல தரமான சம்பவங்கள் இருக்கும் என எதிர்பார்த்தனர் ரசிகர்கள். ஆனால் அதற்கு அப்படியே உல்ட்டாவாக இன்றைய முதல் புரமோ. இதனை பார்த்து அப்செட்டாகி போயுள்ளனர் நெட்டிசன்கள்.
பிக்பாஸ் அசைன்மெண்ட்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், இந்த ஆட்டம் முடிந்தவுடன் ஒரு ஆட்டம் இருக்கும்!.... அதுதான் மொட்டைக்கு கொடுத்த பிக்பாசின் அசைன்மெண்ட்! என கூறியுள்ளார்.
சண்டை இருக்கும் தானே..
ஏதாவது சண்டை நடக்கும் என எதிர்பார்த்திருப்பார் போல இந்த நெட்டிசன், ஏப்பா இந்த ஆட்டம் முடிந்தவுடன் சண்டை இருக்கும்தானே? என கிண்டலாய் கேட்டிருக்கிறார்.
கோச்சிங் கிளாஸ்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் சுரேஷ் சக்கரவர்த்தியின் பர்ஃபாமன்ஸை பார்த்த இந்த நெட்டிசன் இந்த மொட்டை கோச்சிங் கிளாஸ் போய்விட்டுதான் வந்துருக்குப்பா!. என கூறியிருக்கிறார்.
பிரபுதேவா ரியாக்ஷன்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், பிரபுதேவா ரியாக்ஸன் ரைட் நௌ.. என பிரவுதேவா கையில் டீ கப்புடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார்.
கன்டென்ட் தருகிறார்கள்
புரமோவை பார்த்த மற்றொரு நெட்டிசனான இவர், இது நாங்க ஒத்து கொள்ள மாட்டோம்.... அனிதாவும் சுரேஷும் தான் கன்டென்ட் தருகிறார்கள் ஆகையால் சண்டைதான் வேண்டும் என்பதை மறைமுகமாக கேட்டுள்ளார்.
வடிவேலு பர்ஃபாமன்ஸ்
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், பிக் பாஸ் வீட்டின் தற்போதைய நிலை என வடிவேலு மூன்று கெட்டப்பில் கரகாட்டம் ஆடும் காட்சியை ஷேர் செய்துள்ளார்.
ஆட விட்டு வேடிக்கை..
புரமோவில் சுரேஷும் அனிதாவும் டான்ஸ் ஆடுவதை பார்த்த இந்த நெட்டிசன், சண்டைகோழி இரண்டையும் ஆட விட்டு வேடிக்கை காட்ட ஆரம்பிச்சிடாரு இந்த பெரியபாசு.. என கூறியுள்ளார்.
சண்டை நடக்கும்னு பார்த்தா
அடேய் என்னடா இது எல்லாம்.. காலைல ஒரு பெரிய சண்டை நடக்கும்னு பார்த்தா.. இங்க என்னனா ஆசை மச்சான் சின்ன மச்சான்னு பாட்டு ஓடுது.. எப்படியோ சந்தோசமா நடிக்காம இருந்திங்கன்னா பரவாயில்ல.. ஆனா சுரேஷ் சக்கரவர்த்தி யாரு சாமி நீ என கேட்டுள்ளார்.
மொட்ட ஜாலியா டூயட்
என்னடா இது.. இன்னைக்கு மொட்டைக்கு ரிவென்ச் இருக்கும்ன்னு நினைச்சா.. மொட்ட ஜாலியா டூயட் பண்ணிட்டு இருக்கு.. மொட்டைக்கு கிடைத்த வாய்ப்பை பாரேன் என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.
எல்லா நாளும் கார்திகை..
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், என்னாங்கப்பா இன்னைக்கும் சண்டை இருக்கும் என்று பாத்தா எல்லாரும் "எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை" கணக்கா இருக்கீங்க என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











