தம்பி நீங்க பாலா மிதுன் ஃபேனா.. பிக் பாஸ் நிகழ்ச்சியை பங்கம் பண்ணும் சூரரைப் போற்று மீம்ஸ்!

சென்னை: கொரோனா, வெட்டுக்கிளி, நீட் என எந்த பிரச்சனை வந்தாலும், சூர்யாவின் படங்கள் அதை முன்கூட்டியே கணித்துள்ளன சமீபத்தில் ஏகப்பட்ட மீம்கள் வைரலாகின.

இந்நிலையில், தற்போதைய டிரெண்டிங் சூரரைப் போற்று பட மீம்கள் தான்.

எதற்கெடுத்தாலும், சூரரைப் போற்று மீம்களை போட்டு கலாய்த்து வரும் ரசிகர்கள், பிக் பாஸ் நிகழ்ச்சியையும் விட்டு வைக்கவில்லை.

வீக்கெண்ட்

வீக்கெண்ட்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வீக்கெண்ட் வந்தாலே கமல்ஹாசனின் தரிசனத்திற்காகவே ரசிகர்கள் காத்திருப்பார்கள். வார வாரம் வித விதமான உடைகளில் செம ஹேண்ட்ஸம்மாக கமல்ஹாசன் பிக் பாஸ் செட்டுக்கு வருகை தருவதும், சாட்டையை சுழற்றுவது போல சுழற்றி பிக் பாஸ் போட்டியாளர்களை உஷார் படுத்தி விட்டு செல்வதுமாக இருக்கும். எலிமினேஷன் தான் ஹேப்பியே!

ஏகப்பட்ட மீம்ஸ்

ஏகப்பட்ட மீம்ஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு எபிசோடையும் பார்க்கும் ரசிகர்கள், அதுபற்றியே பேசுவதும், அதனை ட்ரோல் செய்வதும், மீம் போடுவதுமாக அந்த ஷோவுக்கு காசு வாங்காமல் புரமோஷன் பண்ணிக் கொண்டு தான் இருக்கிறார்கள். செய்திகளும், அந்த நிகழ்ச்சியை சுற்றியே அதிகம் சுழல்வதால், டி.ஆர்.பி கிங்காக அந்த நிகழ்ச்சி மாறி உள்ளது.

சூரரைப் போற்று மீம்ஸ்

சூரரைப் போற்று மீம்ஸ்

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஊர்வசி நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு அமேசான் பிரைமில் வெளியான சூரரைப் போற்று படம் வேற லெவல் வெற்றிநடை போட்டு வருகிறது. அந்த படத்தின் காட்சிகளை வைத்து ஏகப்பட்ட பிரச்சனைகளுக்கு மீம்களை போட்டு வரும் ரசிகர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியை கலாய்த்தும் மீம்களை போட துவங்கி விட்டனர்.

பாலா மிதும் ஃபேனுங்களா

பாலா மிதும் ஃபேனுங்களா

ஐயா.. ரம்யாக்கு ஷிவானி மேல பொறாமைங்கையா.. சுச்சி லூசுங்கையா. சனம் பாலாவை லவ் பண்றாங்கைய்யா, பாலா இல்லைன்னா பிக்பாஸ் புரமோவே இல்லைங்கய்யா என பாலா ரசிகர்கள் சொல்வதும், அதற்கு, தம்பி பாலா மிதுன் பேனுங்களா என அப்துல்கலாம் கேட்க, ஆமாங்கய்யா என சூர்யா சொல்வது போல உருவாக்கப்பட்ட மீம் வேற லெவலில் வைரலாகி வருகிறது.

நான் நினைச்சிருந்தேனா

நான் நினைச்சிருந்தேனா

சூரரைப் போற்று படத்தில் வில்லன் நடிகர் சூர்யாவிடம் நான் நினைச்சிருந்தேனா என பேசும் வசனம் ஏகப்பட்ட மீமாக மாறி டிரெண்டாகி வருகிறது. அதை வைத்து, நான் நினைச்சிருந்தேனா.. நீங்க சாப்பிடுற முன்னாடியே இரவு உணவுக்கு ஸ்பெஷல் ஐட்டம்ஸ் இருக்கு, யாரும் சாப்பிடாதீங்கன்னு சொல்லியிருப்பேன்.. ஆனால், சொல்லமாட்டேன் என பிக் பாஸையே கலாய்த்து வருகின்றனர்.

பிக் ஆட்னு மாத்திடலாமா

பிக் ஆட்னு மாத்திடலாமா

தொடர்ந்து தினமும் ஒவ்வொரு நிறுவனமாக விளம்பர டாஸ்க்குகளை கொடுத்து போர் அடித்து வருவதை பார்த்து கடுப்பான ரசிகர்கள், பிக் பாஸ் என்ற பெயரை மாற்றி விட்டு, பேசாம பிக் ஆட்னு மாத்திடலாமா என தசாவதாரம் மீமை போட்டு பங்கம் பண்ணி உள்ளனர். அதை வாங்கு, இதை வாங்குன்னு நல்லா உயிரை வாங்குறாங்க

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X