ஓ.. இதுதான் அரசியல் டாஸ்க்கா? யார் கொடி பறக்குது பாக்கலாம்! பிக்பாஸ் புரமோ.. நெட்டிசன் ரியாக்ஷன்ஸ்
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய மூன்றாவது புரமோவை பார்த்த நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
பிக்பாஸ் வீட்டில் இந்த வார லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்காக அரசியல் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு ஹவுஸ்மேட்டுகள் மூன்று அணிகளாக பிரிந்து மூன்று கட்சிகளாக உள்ளனர்.
அரசியல் மாநாடு டாஸ்க் என்றதும் பிரச்சாரம் பேச்சு என கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிக்பாஸ் வீட்டில் பிஸிக்கல் டாஸ்க்கும் கொடுக்கப்பட்டுள்ளது மூன்றாவது புரமோவில் தெரியவந்தது.

அரசியல் டாஸ்க்கா?
இதனை பார்த்த நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதன்படி இன்றைய மூன்றாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், ஓ... இதுதான் அரசியல் டாஸ்க்கா? நான் கூட எங்க பிரச்சாரம் பண்ணி பேசி உயிர எடுப்பாங்கன்னு நினைச்சிட்டேன்... அப்பாடா... பிஸிக்கல் டாஸ்க்... என பெருமூச்சு விட்டுள்ளார்.

வன்மத்த கொட்டுவாங்கன்னு...
இன்றைய மூன்றாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், எஸ்... நான் கூட பயந்துட்டேன்... இவங்க திருப்பியும் பேசி பேசி வன்மத்த கொட்டுவாங்கன்னு... பரவாயில்ல.. பிஸிக்கல் டாஸ்க்தான்... என பதிவிட்டுள்ளார்.

சிரிப்ப அடக்க முடியல
இன்றைய மூன்றாவது புரமோவின் இறுதியில் இமான் அண்ணாச்சியும் தாமரை செல்வியும் ஒருவருக்கொருவர் மல்லுக்கு நிற்பதை பார்த்த இந்த நெட்டிசன், கடைசி சில நொடிகள் சிரிப்பு அடக்க முடியல... தாமரை செல்வி வெர்சஸ் இமான் அண்ணாச்சி.. என பதிவிட்டுள்ளார்.

இங்க மட்டும் என்ன விதிவிலக்கா?
இன்றைய மூன்றாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், அரசியல் என்றாலே அடிதடி. இங்க மட்டும் என்ன விதிவிலக்கா? யார் கொடி பறக்குதுனு பார்க்கலாம் என டிவிட்டியுள்ளார்.

யார் மூஞ்சி உடைய போகுதோ?
இன்றைய மூன்றாவது புரமோவில் கொடிக் கம்ப டாஸ்க்கில் இமான் அண்ணாச்சி, தாமரை செல்வி பாவனி ரெட்டி ஆகியோர் அடித்து கொள்வதை பார்த்த இந்த நெட்டிசன், இன்னைக்கு யார் மூஞ்சியெல்லாம் உடைய போகுதோ தெரியலையே என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











