காப்பான் சூர்யா நறுக்குன்னு கேட்ட அந்த கேள்வி உங்களை தான் ரஜினி சார்: நெட்டிசன்கள்
Recommended Video

சென்னை: காப்பான் டீஸரில் சூர்யா ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்துள்ளார்.
கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா பிரதமரின் தலைமை பாதுகாப்பு அதிகாரியாக நடித்துள்ள படம் காப்பான். அந்த படத்தின் டீஸர் தமிழ்ப் புத்தாண்டு ஸ்பெஷலாக ரிலீஸானது.

டீஸரில் சூர்யா ஏகப்பட்ட கெட்டப்புகளில் வந்து அசத்தியுள்ளார். அதில் நதி நீரை பற்றி பேசும்போது அவர் போட்டுள்ள அந்த கெட்டப் ஒரு முன்னணி நடிகரை நினைவுபடுத்துகிறது. அதிலும் குறிப்பாக அவரது ஹேர்ஸ்டைல்.
எதற்கெடுத்தாலும் போராட்டம் நடத்தினால் தமிழ்நாடே சுடுகாடு ஆகிவிடும் என்று வருங்கால அரசியல்வாதி ரஜினிகாந்த் முன்பு தெரிவித்தார். இந்நிலையில் காப்பான் டீஸரில் சூர்யா கேட்கும் கேள்வி ரஜினிக்கு தான் என்கிறார்கள் நெட்டிசன்கள்.
போராடுறதே தப்புன்னா, போராடுற சூழல்நிலையை உருவாக்குவதும் தப்புதானே என்று டீஸரில் சூர்யா கேள்வி எழுப்பியுள்ளார். இது ஒரே நேரத்தில் ரஜினி மற்றும் அரசியல்வாதிகளை கேட்பதாக அமைந்துள்ளது என்கிறார்கள் நெட்டிசன்கள்.
சூர்யா கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லுங்க ரஜினி சார் என்று அவரை மென்ஷன் செய்து ட்வீட் செய்கிறார்கள் நெட்டிசன்கள்.


Click it and Unblock the Notifications











