பிக் பாஸ் 3: கஸ்தூரியை வைத்து பெருசா பிளான் போடும் நெட்டிசன்ஸ்
Recommended Video
சென்னை:கஸ்தூரியை வைத்து பெரிதாக பிளான் போடுகிறார்கள் பிக் பாஸ் ரசிகர்கள்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனை உலக நாயகன் கமல் ஹாஸன் தொகுத்து வழங்குகிறார். நிகழ்ச்சி அடுத்த மாதம் துவங்க உள்ளது. ஜாங்கிரி மதுமிதாவை தவிர வேறு எந்த போட்டியாளர் விபரமும் தெரியவில்லை.

இந்நிலையில் பிக் பாஸ் ரசிகர்கள் நடிகை கஸ்தூரியை போட்டியாளராக பார்க்க விரும்புகிறார்கள். கடந்த சீசனில் கமல் எதற்கெடுத்தாலும் மும்தாஜையே திட்டினார். இம்முறை கஸ்தூரியை பிக் பாஸ் வீட்டிற்கு அனுப்பினால் கமல் நிச்சயம் அவரையும் திட்டுவார்.
அப்படி கமல் தேவையில்லாமல் திட்டினால் கஸ்தூரி அங்கேயே லெஃப்ட் அன்ட் ரைட் கொடுப்பார். அதை பார்க்க ஆவலாக உள்ளது என்கிறார்கள் நெட்டிசன்கள்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு கஸ்தூரியை ஏற்கனவே கேட்டுள்ளனர். ஆனால் பிள்ளைகளை பிரிந்து இருக்க முடியாது என்பதால் அவர் பிக் பாஸ் வீட்டிற்கு செல்ல மறுக்கிறார்.
இருப்பினும் அவரை பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள். நீங்கள் பிக் பாஸ் வீட்டிற்கு வந்தால் சுவாரஸ்யமாக இருக்கும். ஓவராக சீன் போடுபவர்களுக்கு நீங்கள் தான் சரியான ஆள் என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
எல்லாம் சரி, அவர் பிள்ளைகளை யார் பார்த்துக் கொள்வது?


Click it and Unblock the Notifications











