பாலாஜிக்கு ரெட் கார்டு கொடுக்க முடியுமா? முடியாதா? கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரியை தரக்குறைவாக பேசி மைக்கை கழட்டி அடித்த பாலாஜிக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரம் முழுக்க சுவாரசிய குறைவாக இருக்கும் இரண்டு நபர்கள் வெள்ளிக்கிழமை ஜெயிலுக்கு அனுப்பப்படுவது வாடிக்கை.
இதற்காக இரண்டு ஹவுஸ்மேட்ஸ்களை சக ஹவுஸ் மேட்ஸ் தேர்வு செய்து ஜெயிலுக்கு அனுப்ப வேண்டும். அந்த வகையில் பாலாஜியையும் ஆரியையும் ஹவுஸ்மேட்ஸ் ஜெயிலுக்கு அனுப்பி வைத்தனர்.

கண்களில் நீர் வழிய
மற்ற ஹவுஸ்மேட்ஸின் குடும்பத்தினர் மட்டுமின்றி தனது மகள் வந்தப் போது கூட கண்களில் நீர் வழிய ஃபிரீஸ் டாஸ்க்கிலேயே இருந்தார் ஆரி. அவர் கண்களில் நீர் வழிவதை பார்த்து பிக்பாஸே ஆரி ரிலீஸ் என்றார்.

வொர்ஸ்ட் பர்ஃபாமர்
ஹவுஸ் கீப்பிங் மற்றும் சமையல் என அனைத்திலும் சிறப்பாகவும் செயல்பட்டார். அந்தளவுக்கு சிறப்பாக விளையாடி ஆரியை வொர்ஸ்ட் பர்ஃபாமர் என்று பிக்பாஸ் வீட்டின் ஜெயிலுக்கு அனுப்பிவிட்டனர் ஹவுஸ்மேட்ஸ்.

ஜெலுக்கு அனுப்பப்பட்ட ஆரி
ரியோவும் தொடர்ந்து நான்காவது வாரமாக ஆரியை நாமினேட் செய்து தனது பழியை தீர்த்துக்கொண்டார். இதனைத் தொடர்ந்து ஜெயிலுக்கு அனுப்பப்பட்டனர் ஆரியும் பாலாஜியும்.

அடிப்பது போல கைகளை முறுக்கி
ஜெயிலில் ஆரியை நீ போ என்று பேசியதோடு, மரியாதைக் கெட்டும், அவ்ளோதான் உனக்கு.. என்ன செய்வேன்னு தெரியாது என்று படு மோசமாக நடந்து கொண்டார். மேலும் கைகளை முறுக்கியப்படி அடிப்பது போலும் நடந்து கொண்டார்.

காலை நீட்டிய பாலாஜி
ஆரியிடம் பாலாஜி மோசமாக நடந்து கொள்வது இது முதல் முறையல்ல. ஏற்கனவே வேற எதையாவது நீட்டுவேன் என்றார். ஆரியை நோக்கி காலை நீட்டி பேசினார். அதற்கெல்லாமும் கடும் எதிர்ப்பு எழுந்தது.

சனம் ஷெட்டியிடம்..
ஆனால் கமல் அதைப்பற்றி கொஞ்சமும் கண்டுக்கவும் இல்லை. கண்டிக்கவும் இல்லை. இதேபோல் சனம் ஷெட்டி விவகாரத்திலும் அவரை தரக்குறைவாகவும் கேவலமாகவும் பேசினார். அப்போதும் கமல் கண்டிக்கவில்லை.

பாலாஜிக்கு ரெட் கார்டு
இந்நிலையில் நேற்று மைக்கை கழட்டி அடித்து, கேவலத்தின் உச்சக்கட்டமாக நடந்து கொண்டார். இதனை பார்த்த நெட்டிசன்ஸ், பாலாஜிக்கு நிச்சயம் ரெட் கார்டு கொடுத்தே ஆக வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
பல்லை காட்டிவிட்டு செல்வீரா..
பாலாஜி ஆரியிடம் நடந்து கொண்ட விதத்தை பார்த்த இந்த நெட்டிசன், கமல் சார் நியாயம் வழங்குவீரா இல்லை பல்லை காட்டிவிட்டு செல்வீரா என கேட்டுள்ளார்.
தர முடியாதா?
பாலாஜிக்கு ரெட் கார்டு தர முடியுமா முடியாதா? மைக் ரிமுவ் பண்ணாலே ரெட் கார்டுன்னு கமல் சொன்னாரு. இன்னைக்கு அதை உடைக்க போயிட்டான் கிறுக்கு பாலா. மேலும் முந்தைய டைட்டில் வின்னர்களான ஆரவ், ரித்விகா, மற்றும் முகேனையும் பாலாஜி இன்சல்ட் செய்துவிட்டார் என்ற பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.
மெண்டல் டார்ச்சர் தருகிறார்கள்
ஆரிக்கு நீதி வேண்டும்.. அவரை பிக்பாஸ் போட்டியாளர்கள் கொடூரமாக டார்கெட் செய்கிறார்கள். அவருக்கு வேண்டும் என்றே மெண்டல் டார்ச்சர் தருகிறார்கள் என்று கமலின் டிவிட்டர் ஹேண்டிலை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.
வெட்கமில்லாதவர் பாலாஜி
பாலாஜிக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும். அவர் இந்த சமூகத்துக்கு தவறான எடுத்துக்காட்டு. கேவலமான புத்தி.. ஆரியை பத்தி பேசவோ முந்தைய வின்னர்கள் குறித்து பேசவோ எந்த தகுதியில்லாவை... வெட்கமில்லாதவர் பாலாஜி என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











