இன்னும் நாமினேஷன் முடியலையா? சட்டுபுட்டுன்னு ஒரு முடிவுக்கு வாங்க அப்பு.. காண்டான நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவை பார்த்த நெட்டிசன்கள் இன்னுமா நாமினேஷனை முடிக்கவில்லை என கேட்டு காண்டாகியுள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது. இதில் நாமினேஷன் டாப்புள் கார்டை கொடுத்து பற்ற வைத்துள்ளார் பிக்பாஸ்.
இந்த நாமினேஷன் டாப்புள் கார்டை பெறுவதற்காக குட்டிக்கரணம் அடிக்காத குறையாக விடாபிடியாக இருந்து வருகின்றனர் நாமினேஷனில் உள்ள போட்டியாளர்கள்.

நெட்டிசன்ஸ் ரியாக்ஷன்
இந்த நாமினேஷன் டாப்புள் கார்டுக்கு போட்டி போடும் போட்டியாளர்கள் நாமினேஷன் லிஸ்ட்டில் இல்லாத ஆஜித் மற்றும் அர்ச்சனாவை நாமினேட் செய்கின்றனர். இதனை பார்த்த நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

அப்பாயிண்டட் குக்கா?
இங்க சிலர் அர்ச்சனா தானே சோறு போடுறாங்க அவங்க இல்லனா சோறு கிடைக்காது. இந்த மைண்ட் செட்டுக்கு ஆடியன்ஸ மாத்திட்டாங்க பாரு அது தான் ஸ்ட்ரேட்டர்ஜி.
பசிச்சா சமைச்சு சாப்பிடறாங்க ஹவுஸ்மேட்ஸ் இல்ல பட்டினி கிடைக்கிறாங்க! இவங்க அப்பாயிண்டட் குக்கா? 14 ஹவுஸ்மெட்ஸும் குழந்தைங்களா என கேட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

விருந்துக்கா வந்திருக்காங்க
அவனவன் சோறில்லாமல் கஷ்டப்படுறான்! 14 பேரும் ஓவர் 19. அளவு தெரியாது சமைக்க தெரியாதுனு சீன் போடறது! நல்லா எஸ்கேப் பலர்! கத்துக்க தானே உள்ளே வந்தாங்க எல்லாரும்! சொதப்பனாலும் உயிர் வாழ சோறு போட்டா போதும்! இங்க என்ன விருந்துக்கா வந்திருக்காங்க என விளாசியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

ஆட்டம் சூடு பிடிக்குது
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், பிக் பாஸ் இப்போ தான்.. வீட்டில் ஆட்டம் சூடு பிடிக்குது.. நிஷா - ஆஜித் நாமினேட்.. பாலா - அர்ச்சனா.. செம்ம.. செம்ம..

பாலாஜிக்கு கிடைக்கணும்
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், என்னை பொறுத்த வர அந்த கார்டு பாலாஜிக்கு கிடைக்கணும் என்று கூறியுள்ளார்.

விஜய் டிவி வேலை
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், நிஷாவுக்கு பாசிடிவ் கமெண்ட் அவ்ளோவா வரல, இதையும் மீறி இந்த வாரம் நிஷா சேவ் ஆனா அது விஜய் டீவிகாரன் பண்ணுற வேலையா தான் இருக்கும் என்று கூறியுள்ளார்.

உருப்படியா போகும்
பாலாஜி அர்ச்சனாவை நாமினேட் செய்ததை பார்த்த இந்த நெட்டிசன், சூப்பர் சூப்பர்.. பாலாஜி, நாமினேட்.. அப்பாடா எப்படியாவது அவளை வெளிய அனுப்பிட்டா இந்த பிக்பாஸ் 4ல் இப்ப இருக்குறத விட கொஞ்சம்.. உருப்படியா போகும்
அது சரி ஏன் இந்த ஷிவானிய யாரும் நாமினேஷன் பண்ண மாட்டேங்குறாங்க என கேட்டுள்ளார்.

ஒரு முடிவுக்கு வாங்க அப்பு
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், அடடே!..இன்னும் நாமினேசன் முடியலையா? சட்டுபுட்டுன்னு ஒரு முடிவுக்கு வாங்க அப்பு என கலாய்த்துள்ளார்.

ஒரே மர்மமா இருக்கே!
புரமோவில் பாலாஜி அர்ச்சனா அக்காவை நாமினேட் செய்கிறேன் என்று கூறியதை கேட்ட இந்த நெட்டிசன், அர்ச்சனா அம்மா, பயில்வானுக்கு எப்போது அக்கா ஆனாங்க?... ஒரே மர்மமா இருக்கே! என கிண்டலடித்துள்ளார்.

கோபம் வருது..
மற்றொரு நெட்டிசனான இவர், புரமோவில் ஜித்தன் ரமேஷ் கோபப்படுவதை பார்த்து ஏய் சனா சிட்டி ஜித்தன் ரமேஷ்க்கு கோபம் வருது.. என கிண்டலடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











