எருமயா.. கமல் இதை கண்டிக்கணும்.. பெரியவங்களுக்கு கொஞ்சம் கூட மரியாதையே இல்லயா.. கடுப்பான ஃபேன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய புரமோக்களை பார்த்த நெட்டிசன்கள் கடுப்பாகியுள்ளனர்.
Recommended Video
பிக்பாஸ் நிகழ்ச்சி இம்முறை ஆரம்பமே அசத்தலாக உள்ளது. குழாயடி சண்டை, சென்டிமெண்ட், கண்ணீர் என எதிர்பார்க்காத பல சம்பவங்கள் அரங்கேறி வருகின்றனர்.
ஒவ்வொருவரின் ஒரிஜினாலிட்டியும் மெல்ல வெளிப்பட தொடங்கியுள்ளது.

அவமரியாதையாக
இந்நிலையில் இரண்டாவது புரமோவில் அனிதா சம்பத்தும், பாலாஜி முருகதாஸும் சேர்ந்து நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தியிடம் அவமரியாதையாக நடந்து கொள்வது ரசிகர்களை கடுப்பாக்கியிருக்கிறது. இதுதொடர்பாக பாலாஜி முருகதாஸை விளாசியிருக்கின்றனர் நெட்டிசன்கள்.

எரிச்சலா இருக்கு..
பாலாஜி முருகதாஸ் ரொம்ப ரூட்.. மரியாதை தெரியாதவராக உள்ளார். பெரியவர்களை அவமதிப்பதன் மூலம் பிரபலமடைந்த முந்தைய சீசனில் இருந்த முட்டாள்களைப் போல அவர் இருக்க முயற்சிப்பதாகத் தெரிகிறது. அவரும் அனிதா சம்பத்தும் சுரேஷ் சக்கரவர்த்தி பற்றிய எரும மாடு கருத்து குறித்து சிரிப்பது மிகவும் எரிச்சலூட்டுகிறது என்கிறார் இந்த நெட்டிசன்.

நீதான் எருமை
எனக்கு சுரேஷ் சக்கரவர்த்தியை பிடித்திருக்கிறது. அவர் பிக்பாஸில் சுய மரியாதையுடன் இருக்கட்டும்.. மற்ற பிக்பாஸ் சீசன்களில் இருந்த மூத்தவர்களை போல இல்லை. பாலாஜி முருகதாஸ் நீதான் எரும மாடு மாதிரி இருக்க.. உனக்கு பிடிக்கவில்லை என்பதற்காக வயதில் மூத்தவர்களை அவமானப்படுத்தாதே.. முரடன்.. என திட்டி தீர்த்திருக்கிறார் இந்த நெட்டிசன்.

இந்த சீசனின் மகத்
இந்த சீசனின் மகத் பாலாஜி முருகதாஸ்தான்..சுரேஷ் சக்கரவர்த்தியை பிடித்திருக்கிறது. அவர் நன்றாக விளையாடுகிறார். அவருடைய வயதுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். சுரேஷ் சக்கரவர்த்தி பிக்பாஸ் வீட்டில் உங்களை டார்கெட் செய்தால் நிச்சயம் உங்களுக்கு வோட்டு போடுவோம் என்று கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

கமல் ஹாசன் கேட்க வேண்டும்
பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும்.. கடந்த முறை கவினும் சாண்டியும் சேரன் மற்றும் கஸ்தூரியிடம் மரியாதை குறைவாக நடந்து கொண்டார்கள்.. லாஸ்லியா மோகன் வைத்யாவிடம் மரியாதைக் குறைவாக நடந்து கொண்டார். அவர்களை எச்சரிக்கவில்லை. இந்த முறையாவது கமல்ஹாசன் எச்சரிப்பார் என நம்புகிறேன்.. அதனால் கடந்த முறை அந்த மூன்று பேரும் வெற்றி பெறவில்லை.. என்று கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

அடி வாங்கப் போகும் சிலர்
பிக்பாஸின் இரண்டாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன்,
அநியாயம் எங்க நடந்தாலும் பொங்கனும்னு வந்திருக்கும் சிலர்!
இல்லாத அநியாயத்தை தேடும் சிலர்! தானா வந்து வலையில் சிக்கும் சிலர், ஏன்னா வாயில சனி! சம்மந்தமே இல்லாம பேசி அடி வாங்கப்போகும் சிலர்! என அனிதா சம்பத், பாலாஜி முருகதாஸ் ஆகிய இருவரையும் வச்சு செய்துள்ளார். மேலும் வாழ்த்துகள் விஜய் டிவி, டிஆர்பி எகுறுகிறது என்று கூறியிருக்கிறார் இவர்

நிறுத்த வேண்டும்
மற்றொரு நெட்டிசனான இவர் பாலாஜி பேசியது தேவையில்லாதது.. இரண்டு பக்கங்களில் இருந்தும் சண்டை வருகிறது.. அவர்கள் அதனை நிறுத்த வேண்டும் என அனிதா சம்பத்தையும் பாலாஜி முருகதாஸையும் கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











