ஆண்டவர் தீர்ப்பு பயில்வானை அலறவைக்குமா? இல்லை காற்றில் பறக்குமா? காத்திருக்கும் நெட்டிசன்ஸ்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவை பார்த்த நெட்டிசன்கள் பாலாஜி மீது எடுக்கப்படும் நடவடிக்கைக்காக காத்திருப்பதாக கூறி வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரமோவில் சனம் ஷெட்டியை தரக்குறைவாக பேசிய விவகாரத்தை கையில் எடுத்துள்ளார் கமல்.

ஏற்கனவே பாலாஜிக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வரும் ரசிகர்கள், பாலாஜியை கமல் விசாரிப்பதை வரவேற்றுள்ளனர். மேலும் பாலாஜியை வெளியேற்றுங்கள் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜெயில்ல போடுங்க சார்

ஜெயில்ல போடுங்க சார்

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், ஆண்டவரே இன்னும் என்னா பார்த்துகிட்டு இருக்கீங்க அந்த பயில்வானை புடிச்சி ஜெயில்ல போடுங்க!... அப்ப கூட புத்தி வராது! என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்,

தெளிவு படுத்துங்கள்

தெளிவு படுத்துங்கள்

மற்றொரு நெட்டிசனான இவர், சனம் அட்ஜஸ்ட் செய்துதான் அழகி போட்டியில் வென்றார் என்று பாலா சொன்னதை ஏன் கோர்ட் டாஸ்க்கில் வழக்கு நடத்தவில்லை என்பதை கமல் சார் தெளிவு படுத்த வேண்டும் என கேட்டுள்ளார்.

மாறிவிடுவாரா ஆண்டவர்

மாறிவிடுவாரா ஆண்டவர்

மற்றொரு நெட்டிசனான இவர், இந்த பயில்வான் விசயத்துல நமத்துபோன பட்டாசாக மாறிவிடுவாரா ஆண்டவர்? என கலாய்த்துள்ளார்.

பிரியாணி ஆடு போல

பிரியாணி ஆடு போல

மற்றொரு நெட்டிசனான இவர், ஆஹா.. என்ன சொல்ல போறார் தெரியவில்லை....நாம தான் அவர் பிறந்தநாளைக்கு பிரியாணி ஆடு போல!!!! பாலாஜி ரியாக்ஷன்!!! என பதிவிட்டுள்ளார்.

காற்றில் பறக்குமா?

காற்றில் பறக்குமா?

இரண்டாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன் ஆண்டவர் தீர்ப்பு பயில்வானை அலறவைக்குமா?... இல்லைகாற்றில் பறக்குமா? என்ற எதிர்பார்த்துள்ளார்.

உலகத்துலேயே பெரிய நடிகர்

உலகத்துலேயே பெரிய நடிகர்

மற்றொரு நெட்டிசனான இவர், சனிக்கிழமை ஆனா மட்டும் பாலா பச்சகுழந்தை மாறி ஆயிடுறான்.. நீயாவது இங்க தான் நடிக்கிற அவரு உலகத்துலேயே பெரிய நடிகர்டா என பிதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

வெளியே அனுப்புங்க

வெளியே அனுப்புங்க

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், போன சீசன்ல சரவணன். அந்த காலத்துல பஸ்ல பெண்களை உரசினேன்னு சொன்னதற்கு அவரை வெளியே ஓட்டிவிட்டிங்க!.. இந்த பயில்வான் செயல் அதைவிட கேவலம்!.., உடனே பயில்வானை வெளியே அனுப்பு! என பதிவிட்டுள்ளார்.

சீரழிக்கிறார்கள்..

சீரழிக்கிறார்கள்..

மற்றொரு நெட்டிசனான இவர், கமல்சார் உங்கமேல மரியாதை இருக்கு அதை மக்களாகிய நாங்க கேட்கிறோம் பாலாஐியை வெளியேற்றுங்கள் .தயவு செய்து எங்கள் தமிழ் சமூகத்தின் இளைய தலைமுறைகளுக்கு ஒரு தவறான நபரை முன்னுதாரணப்படுத்தி சீரழிக்காதீர்கள். இவன் பங்குபற்றும் நிகழ்வை கோடிக்கணக்கானோர் பார்த்துக்கொண்டு இருக்கின்றார்கள் என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X