Don't Miss!
- News வரிசையில் நின்று வாக்களித்தார் எடப்பாடி பழனிசாமி.. ஓட்டு போட்ட பின்னர் வைத்த முக்கிய கோரிக்கை!
- Sports என்னை மிரட்டி ஆர்சிபிக்கு விளையாட வைத்தார் கோலி.. உலககோப்பை தோல்வி வலித்தது- கேஎல் ராகுல் பேச்சு
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இன்னைக்கு பெரிய சம்பவம் இருக்குன்னு கமல் சார் வாய்ஸ் சொல்லுது.. யார் சட்டை கிழியப்போகுதோ!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவை பார்த்த ரசிகர்கள் கமல் யாரை வச்சு செய்யப் போகிறாரோ என்று எதிர்பார்ப்பை பதிவிட்டு வருகின்றனர்.
Recommended Video
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவில் பேசும் கமல், நல்லவரா கெட்டவரா? என கேட்டு கோபம் கொப்பளிக்க முகத்தை கடுகடுவென வைத்துக்கொண்டு சொடக்கு போட்டு கேட்டார்.
மேலும் வில்லன் யார்? ஹீரோ யார்? என்றும் மீசையை முறுக்கி விட்டப்படி கேட்டார்.
கமல் பூடக பேச்சு
தொடர்ந்து பேசிய கமல் தன் விளையாட்டை தானே விளையாடுறாங்களா? இல்ல அன்பால் எய்யப்பட்ட அம்பா பாய்றாங்களா? வினாக்கள் பல.. விடைகளை காண்போம் என பூடகமாக பேசியிருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள், பாலாவை வச்சு செய்யப் போகிறாரா அல்லது வழக்கம்போல் ஆரியை வச்சு செய்யப் போகிறாரா என எதிர்பார்த்து காத்துள்ளனர்.
சொல்யூஷன் தாங்க..
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், ஆண்டவரே ஆரம்பம் எல்லாம் நல்லா தான் இருக்கு.. நடுவுல டைவர்ட்டாகி வேற எங்கயாவது போறீங்க.. கொஞ்சம் ஷோவுல கான்சென்ட்ரேட் பண்ணுங்க.. உங்க ஃபிளாஷ் பேக் சொல்லாம, பிக்பாஸ் ஹவுஸ்ல உள்ள சண்டைகளுக்கு சொல்யூஷன் தாங்க.. ப்ளீஸ்.. என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.
ஒருத்தனையும் விடாதீங்க
வில்லன் யாரு பாலாஜி.. ஹீரோ யாரு ஆரி.. தன்னோட விளையாட்டை தானே விளையாடுறாங்களா இல்ல அன்பால் ஏற்பட்ட அம்பா பாயிறங்களா.. ரம்யாவா இல்லனா அர்ச்சனா குரூப்பா.. கமல் ஹாசன் இந்த வாரம் எல்லார் மேலேயும் தப்பு இருக்குது ஒருத்தனையும் விடாதீங்க என்று கூறியுள்ளார்.
கண்டிக்கலைன்னா..
புரோமா எப்ப போடுவாங்கன்னு காத்து இருந்தோம் கழுவி ஊத்த! நடந்த தவறுகளை நீங்க கண்டிக்கலைன்னா மேலும் கழுவி கழுவி ஊத்துவோம்! உங்க அரசியலையும்! என்று எச்சரித்துள்ளார் இந்த நெட்டிசன்.
நம்ப ஆண்டவரு..
சுனாமி போல வருவாரு நிகழ்ச்சி ஆரம்பித்தவுடன் சுருண்டு படுத்துவிடுவாரு நம்ப ஆண்டவரு! என்று விமர்சித்துள்ளனர்.
கேக்குறதே இல்லையே
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், ஆண்டவரே கேள்வி எல்லாம் இப்போ நல்லா தான் இருக்கு.. ஆனா நீங்க அவங்கள கேக்குறதே இல்லையே.. என்று கூறியுள்ளார்.
பாலா மிதுன்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாலாஜியின் நடவடிக்கையை பார்த்து, மீராமிதுனை மிஞ்சிட்டாண்டா இந்த பாலாமிதுன்.. என பாலாஜியை விமர்சித்துள்ளார் இந்த நெட்டிசன்.
காலை நீட்டினது..
இன்னைக்கும் பாலாஜிக்கு தாலாட்டோ தெரியல... காலை உயர்த்தினத ஏதாவது கேட்கிறாரானு பார்ப்போம்.. என கேட்டுள்ளார் இந்த நெட்டிசன்.
பெரிய சம்பவம் இருக்கு
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், இன்னைக்கு பெரிய சம்பவம் இருக்குன்னு.. கமல் சார் வாய்ஸ் சொல்லுது.. யாரு சட்டை கிழிய போகுது.. என கூறியுள்ளார்.
கேட்கவா போறான்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், அட்வைஸ் பண்ணாலும் அந்த பண்ணாடை பாலா மிதுன் கேட்கவா போறான் என விளாசியுள்ளார்.