ரொம்ப மோசம்.. புடிக்காதவங்க மேல விஷத்தை கக்கிட்டு இருக்குற.. சம்யுக்தாவை விளாசும் நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரமோவை பார்த்த் நெட்டிசன்கள் சம்யுக்தாவை விளாசி விட்டுள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவில் பிக்பாஸ் வீட்டில் இன்று நாமினேஷன் புராசஸ் நடைபெறுவது காட்டப்பட்டுள்ளது.
இதில் அனிதாவை நாமினேட் செய்யும் சம்யுக்தா அவரை சிடுமூஞ்சி மேக்ஸ் என குறிப்பிடுகிறார். ஏற்கனவே ஆரியை வளர்ப்பு சரியில்லை, வந்துட்டான் பிக்பாஸ் வீட்டுக்கு என்று பேசினார்.

கமல் கண்டிக்க வேண்டும்
இந்நிலையில் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி வரும் சம்யுக்தாவை நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர். அதனை கமல் கண்டிக்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.

சொம்பு சொம்புயுக்தா
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன் பல்பு பயில்வானையும், சொம்பு சொம்புயுத்தாவையும் கொஞ்சம் வெளியே தள்ளுங்க பிக்பாசு! என கூறியுள்ளார்.

சரியான விஷம்
சம்யுக்தா பேசுவதை பார்த்த இந்த நெட்டிசன், இவ தான் அனிதாவ ஒவ்வொரு பிரச்சினைலயும் கோர்த்துவிடுறா.. அன்னைக்கு லெமன் நேத்து டிரியோ.. ஆரம்பத்தில இருந்து சொல்லுறேன் மத்த ஹவுஸ்மெட் விட சம்யுக்தா சரியான விஷம் என சம்யுக்தாவை விளாசியுள்ளார்.

இது காதலா?
பாலாவை காதல் கண்ண மறைப்பதாக ஆரி கூறுவதை கேட்ட இந்த நெட்டிசன், இது காதலா? கண்றாவியா? ஓட்டுக்காக ஒட்டிகிட்டு திரியுதுங்க! என குறிப்பிட்டுள்ளார்.

எனக்கு ஸ்பேஸ் கொடுக்கல
மற்றொரு நெட்டிசனான இவர், அனிதா: நான் இந்த வாரம் கமல் சார நாமினேட் பன்றன், நான் பேசும்போது அவர் எனக்கு ஸ்பேஸ் கொடுக்கல என கிண்டலடித்துள்ளர்.

பாவமா இருக்குது
ஆரி பாலாஜியை நாமினேட் செய்து காதல் கண்ண மறைக்குது என்று கூறியதை பார்த்த இந்த நெட்டிசன், இவங்க பண்ணுறது காதல். பண்றத வெளியே இருந்து பார்க்கும்போது எவ்வளவு கன்றாவியா இருக்குது.. உள்ள இருக்குறவங்க நிலமையை நினைச்சாத்தான் பாவமா இருக்குது என குறிப்பிட்டுள்ளார்.

சிஷ்யனும்..
மற்றொரு நெட்டிசனான இவர், பாலாஜியும் ஆஜித்தும் ஆரியை நாமினேட் செய்வதை பார்த்த இந்த நெட்டிசன், பயில்வானும், பயில்வானின் சிஷ்யனும் சொல்லி வச்சமாதிரி ஆரியை அட்டாக் பண்றாங்களே! என குறிப்பிட்டுள்ளார்.

விஷத்தை கக்குது
அனிதா சம்பத் பண்ணுறது கொஞ்சம் இல்ல ரொம்பவே ஓவர் தான். ஆனா உள்நோக்கத்தோடு பண்ணுறது இல்ல ஒரு புரிதல் இல்லாம லூசு மாதிரி பண்ணுது. ஆனா சம்யுக்தா நீயெல்லாம் அதைவிட மோசமான ஆளு.. உனக்கு புடிக்காதவங்க மேல விஷத்தை கக்குற மாதிரி கக்கிட்டு இருக்குற என விளாசியுள்ளார்.

பக்காவா ஃபாலோ பண்றானே
ஆஜித் ஆரியை நாமினேட் செய்ததை பார்த்த இந்த நெட்டிசன், இந்த பொடியன் ஆஜித்திக்கு ஆரிமேல என்ன காண்டோ! பயில்வானை பக்காவா ஃபாலோ பண்றானே! என குறிப்பிட்டுள்ளார்.

கேட்க மாட்டீங்களா?
சம்யுக்தா ஏற்கனவே, ஆரிய வளர்ப்பு சரியில்ல என்று கூறியதையும் அனிதாவ முந்திரி கொட்டை, சிடு மூஞ்சி என்று சொல்லியதையும் குறிப்பிட்டுள்ள இந்த நெட்டிசன்,
கமல் சார் இதைப்பற்றி கேட்க மாட்டீங்களா என கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











