விசாரணைக்கு வாங்க.. ரியா சக்கரவர்த்திக்கு தூண்டில் போடும் பீகார் போலீஸ் #ArrestRheaChakraborty
மும்பை: சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரண வழக்கு நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.
Recommended Video
பாலிவுட் நெப்போடிசம் பிரச்சனைகள் எல்லாம் தாண்டி, தற்போது, முக்கிய குற்றவாளியாக காதலி ரியா சக்கரவர்த்தி கருதப்படுகிறார்.
பாட்னா போலீசாரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க முன் வர வேண்டும் என ரியா சக்கரவர்த்திக்கு பீகார் போலீஸ் வலியுறுத்தி உள்ளது.

முன்னெச்சரிக்கை பெயில்
நடிகையும் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் காதலியுமான ரியா சக்கரவர்த்தி, அவரை ஏமாற்றி பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார் என்றும், சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலைக்கு இவரும் காரணமாக இருக்கக் கூடும் என்ற கோணத்தில், இவரை கைது செய்ய வேண்டும் என பாட்னா காவல் நிலையத்தில், சுஷாந்தின் தந்தை வழக்கு தொடுத்தார். பாட்னா போலீஸ் தன்னை கைது செய்யக் கூடாது என முன்னெச்சரிக்கையாக பெயில் வாங்கி வைத்துள்ளார் ரியா என்ற தகவல் வெளியானது.

தலைமறைவு
சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்தில் தனக்கு தொடர்பில்லை என்றும், வீணாக தன் மீது திட்டமிட்டே சிலர் பழி சுமத்தி வருகின்றனர் என்றும் சில தினங்களுக்கு முன்னதாக உருக்கமாக வீடியோ ஒன்றை ரியா சக்கரவர்த்தி வெளியிட்டு இருந்தார். மும்பை போலீசார், சுஷாந்த் சிங் வழக்கில் மெத்தனம் காட்டுவதாகவும், பாட்னா போலீசார் மும்பை வந்து ரியாவிடம் விசாரணை நடத்த முயன்றும் முடியவில்லை என்றும், அவர் தலைமறைவு ஆகி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

விசாரணைக்கு வாங்க
கடந்த ஜூலை 27ம் தேதி, மும்பை விரைந்த 4 பேர் கொண்ட பாட்னா போலீசார், இன்னமும் ரியா சக்கரவர்த்தியிடம் நேரடியாக விசாரணை நடத்த முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில், பீகார் தலைமை காவலர், ரியா சக்கரவர்த்தி மீது தவறு ஒன்றும் இல்லை என்றால், அவர் தாமாக முன் வந்து விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். சிபிஐ விசாரணை வேண்டும் என கோரிக்கை விடுத்த அவர், ஏன் இப்படி கண்ணாமூச்சி ஆட்டம் ஆடுகிறார் என்று தெரியவில்லை எனக் கூறியுள்ளார்.
ரியாவை கைது செய்யுங்க
இந்நிலையில், தொடர்ந்து ட்விட்டர் பக்கத்தில், #ArrestRheaChakraborty என்ற ஹாஷ்டேக்கை பதிவிட்டு, நடிகை ரியா சக்கரவர்த்தி தான் சுஷாந்த் சிங்கின் மரணத்திற்கு காரணம் என பாலிவுட் ரசிகர்கள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன் வைத்து வருகின்றனர். மேலும், உடனடியாக ரியா சக்கரவர்த்தியை கைது செய்து விசாரித்தால், உண்மை வெளியாகும் என்றும் கூறி வருகின்றனர்.
தனி விமானம்
மேலும், சில நெட்டிசன்கள், மகாராஷ்ட்ரா முதல்வர் மற்றும் பாலிவுட் மாஃபியா உதவியுடன் ரியா சக்கரவர்த்தி தனி விமானம் மூலம் வெளிநாடு தப்பிச் சென்று விட்டார் என்றும், அவர் மும்பையிலேயே இல்லை என்றும் பதிவிட்டு வருகின்றனர். சுஷாந்த் சிங்கின் தங்கை மற்றும் குடும்பம், இந்த விவாகாரத்தில் பிரதமர் மோடி தலையிட்டு, உரிய விசாரணை நடத்தி சுஷாந்த் ஆத்மா சாந்தியடைய அவருக்கு சரியான நீதியை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











