விஜய் டிவியின் கையாள் என்றால் எப்படி வேண்டுமானாலும் ஆடலாமா? சுரேஷை அவமானப்படுத்தும் ரியோ!

சென்னை: சுரேஷ் சக்கரவர்த்தியை அவமானப்படுத்தும் ரியோவை நெட்டிசன்கள் வச்சு செய்து வருகின்றனர்.

Recommended Video

Bigg Boss 4 Tamil • Bigg Bossகு வேற வேலை இல்லையா? | Rio Suresh சண்டை

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரமோவில் சுரேஷ் சக்கரவர்த்தி பிக்பாஸ் குறித்து பேசும் போது அவரை அசிங்கப்படுத்தும் வகையில் ரியோ பேசியது பார்வையாளர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

சுரேஷ் சக்கரவர்த்தி பிக்பாஸ் குறித்து பேசிய நிலையில் தேவையே இல்லாமல், அவரை சீண்டியுள்ளார் ரியோ. இதனை பார்த்த நெட்டிசன்கள் ரியோ தன்னை நல்லவர் போன்று காட்டி சுரேஷ் சக்கரவர்த்தியை டேமேஜ் செய்ய முயற்சி செய்கிறார் என விளாசியுள்ளனர்.

உல்டாவான கதை

உல்டாவான கதை

ரியோவின் பிஹேவிங்கை பார்த்த இந்த நெட்டிசன், அது ஒன்னும் இல்லைங்க போன சீசன்ல தர்ஷன், வனிதாவ எதிர்த்து அவன் ரீச்சான மாதிரி ரீச்சாகலாம்னு பாக்குறான் போல பையன். ஆனா இங்க இது கொஞ்சம் உல்டா ஆன கதை அவனுக்கு தெரியாது போல என கூறியுள்ளார்.

சவாலான போட்டியாளராச்சே.

சவாலான போட்டியாளராச்சே.

அவருக்கு பதிலளித்துள்ள இந்த நெட்டிசன், எப்படி தெரியும்... அவன்தான் சவாலான போட்டியாளராச்சே.. காமெடி டைம் அவன ஏத்திவிட்ருக்கு பாஸ்.. ரியோ தம்பி மெதப்புல இருக்காரு... என விளாசியிருக்கிறார்.

அதுதாண்டா வேலை

அதுதாண்டா வேலை

ரியோ சுரேஷிடம் பேசியதை பார்த்த இந்த நெட்டிசன், டேய் ரியோ நீங்க ஏதாவது தப்பு செஞ்சா பிக்பாஸ் சொல்லுவாரு.. பிக்பாஸ்க்கு அதுதாண்டா வேலை.. அது தவிர என்னடா வேலை.. நீங்க தப்பா விளையாடினால் கண்டிப்பா சொல்லுவாரு.. அதுகூட தெரியாம எப்படிடா பிக்பாஸ் வீட்டுக்கு வந்த? என கேட்டுள்ளார்.

எப்படியும் ஆடலாமா?

எப்படியும் ஆடலாமா?

மற்றொரு நெட்டிசனான இவர் ரியோ பேசுவதையும் நடந்து கொள்வதையும் பார்த்துவிட்டு, விஜய் டிவியின் கையாள் என்றால் எப்படி வேண்டுமானாலும் ஆடலாமா? என விளாசியுள்ளார்.

பொழப்ப கெடுத்துடும் தம்பி

பொழப்ப கெடுத்துடும் தம்பி

மற்றொரு நெட்டிசனான இவர், ரியோ எவிக்ஷனுக்கு வந்துடாத தம்பி.. வச்சு செய்ய காத்துக்கிட்டு இருக்கோம்.. தர்ஷன் வனிதாவ டார்கெட் பண்ண மாதிரி சுரேஷ பண்றதா நெனப்பு.. பொழப்ப கெடுத்துடும் தம்பி.. பார்த்து நடந்துக்க.. நான் ரியோவை வெறுக்கிறேன் என பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

வழியனுப்பி வைக்கலாம்

வழியனுப்பி வைக்கலாம்

மற்றொரு நெட்டிசனான இவர், இந்த ரியோ வெளியே போற நேரம் வந்திருச்சி!... வாங்க வழியனுப்பி வைக்கலாம்! என மற்ற ரசிகர்களையும் அழைத்துள்ளார் இந்த நெட்டிசன்.

முழு நேர வேலை

முழு நேர வேலை

இந்த நெட்டிசன், ஒரு வேளை சுரேஷ் சக்கரவர்த்தி நாமினேஷன்ல வந்திருந்தா! (வந்திருப்பார்!) அவர கெட்டவராக புரஜெக்ட் பண்ணுறது தான் ரியோ ராஜின் முழு நேர வேலையா இருக்கும்! என கூறியுள்ளார்.

அடுத்த வாரம் வந்துடுவார்

அடுத்த வாரம் வந்துடுவார்

மற்றொரு நெட்டிசனான இவர், வந்திருந்தால் இல்ல இந்த வாரம் கண்டிப்பா அவர் இருப்பார் போன வாரமே வர வேண்டியது.. வீட்டு தலைவராக்கி தப்பிக்க வச்சிட்டாங்க.. அடுத்த வாரம் ரியோ நாமினேசன்ல இருப்பான் என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

ஏன் சீன் போடுறான்

ஏன் சீன் போடுறான்

சுரேஷ் மேல செம கடுப்புல இருக்கான் போல ரியோ.. அவரு எப்போ மாட்டுவாருன்னு வெயிட் பண்றான்.. என்ன பேசுறாருன்னே தெரியாம.. பதிலுக்கு டேமேஜ் பண்றதா நினைச்சு டேமேஜ் ஆகுறான் ரியோ ராஜ் கேம் தப்பா விளையாடினா சொல்றதுதானே பிக்பாஸுக்கு வேலை.. இவன் ஏன் சீன் போடுறான் என கேட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X