இந்த வாரம் சம்யுக்தா தான் அவுட்டா? விஸ்வரூபம் எடுக்கும் ‘கலீஜ்’ பிரச்சனை.. விளாசும் நெட்டிசன்கள்!

சென்னை: பிக் பாஸ் வீட்டில் ஏகப்பட்ட நல்ல நல்ல வார்த்தைகளை எல்லாம் சொல்லி கொடுத்து வருகின்றனர்.

டுபாக்கூர், தறுதலையை தொடர்ந்து தற்போது சம்யுக்தா, சனம் ஷெட்டியை பார்த்து பேசிய 'கலீஜ்' வார்த்தை சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

#Samyuktha என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி, இந்த வாரம் வீட்டை விட்டு வெளியே போகப் போறது நீ தான்மா என பிக் பாஸ் ரசிகர்கள் கண்டபடி திட்டித் தீர்த்து வருகின்றனர்.

கலீஜ் பிரச்சனை

கலீஜ் பிரச்சனை

அடிதடி சண்டை, ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தாமல், பிக் பாஸ் போட்டியாளர்கள், வரம்புக்குள் இருக்கும் சில கெட்ட வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்தி சண்டை போட்டு வருகின்றனர். டுபாக்கூர், தறுதலை என்கிற வார்த்தைகளை தொடர்ந்து, இப்போ கலீஜ் என்கிற வார்த்தை சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. கலீஜ் என்றால் அழுக்கு, அசுத்தம் என்று பொருள். இந்த வாரம் இதை வைத்தே ஓட்டுவார்கள் என்று தெரிகிறது.

ஹாஷ்டேக் டிரெண்டிங்

ஹாஷ்டேக் டிரெண்டிங்

இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3வது புரமோவில், சனம் ஷெட்டியை பார்த்து கலீஜ் என்கிற வார்த்தையை சம்யுக்தா உபயோகித்த நிலையில், சம்யுக்தாவை பிக் பாஸ் ரசிகர்கள் கண்டபடி திட்டி வருகின்றனர். மேலும், Samyuktha என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி டிரெண்ட் செய்து வருகின்றனர்.

வெளியேற வேண்டும்

வெளியேற வேண்டும்

சம்யுக்தா இப்படி தரக் குறைவான வார்த்தையை பயன்படுத்தி பேச ஆரம்பித்தது சமூக வலைதளத்தில் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. மேலும், சம்யுக்தா இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் பிக் பாஸ் ரசிகர்கள் ஏகப்பட்ட கமெண்ட்டுகளையும், ட்ரோல்களையும் போட்டு வருகின்றனர்.

சாக்கடையிலா

சாக்கடையிலா

கலீஜ் என்றும் வளர்ப்பு சரியில்லை என தேவையில்லாமல் போட்டியாளர்களின் பெற்றோர்களை இழுத்தும் சம்யுக்தா பேசியதை ஏகப்பட்ட பேர் கண்டித்து வருகின்றனர். யம்மா சொம்புயுக்தா, நீ எங்கு பிறந்து, எங்கு வளர்ந்தாய்.. சாக்கடையிலா? என்றும் உச்சகட்டமாகா கேள்வி எழுப்பி திட்டி வருகின்றனர்.

சூடு போடணும்

சூடு போடணும்

"வளர்ப்ப பற்றி பேசுறதுக்கு சம்யுக்தாக்கு வாயில சூடு போடனும் யாராச்சும்" என இந்த பிக் பாஸ் ரசிகை ரொம்பவே கொதித்து எழுந்துள்ளார். சம்யுக்தா தற்போது கணவருடன் சேர்ந்து வாழவில்லை என்றும், அவர் விவாகரத்து செய்து விட்டார் என்றும் சில ரசிகர்கள் கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர்.

போய் வாடி பழைய கிழவி

போய் வாடி பழைய கிழவி

"நீ ரொம்ப ஓவரா பேசுற டம்மி மம்மி.. இந்த வாரமே நீ, போய் வாடி பழைய கிழவி" என சம்யுக்தாவை பிக் பாஸ் வீட்டை விட்டே வெளியேற்ற ரசிகர்கள் திட்டமிட்டு ஏகப்பட்ட கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர். இதற்காகத் தான் பிக் பாஸ் அந்த Topple கார்டு விஷயத்தை கொண்டு வந்தாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ஆயிரத்தில் ஒருவன்

ஆயிரத்தில் ஒருவன்

சம்யுக்தாவும் சனம் ஷெட்டியும் கலீஜ் சண்டை போட்டுக் கொண்டதை மூன்றாவது புரமோவில் பார்த்த ரசிகர்கள், ஆயிரத்தில் ஒருவன் படத்தில், ஆண்ட்ரியாவும், ரீமா சென்னும் அசிங்க அசிங்கமா திட்டிக் கொண்டு சண்டை போடுவது தான் ஞாபகம் வருகிறது என இந்த நெட்டிசன் பங்கமாக கலாய்த்துள்ளார்.

கொடிய விஷம்

கொடிய விஷம்

இந்த பெண்ணை பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே அனுப்புங்கள், ரொம்ப இரிட்டேட்டிங்கா இருக்கு, உடம்பு முழுக்க கொடிய விஷம் என கமெண்ட் போட்டு கழுவி ஊற்றி வருகின்றனர். ஆனால், சம்யுக்தா இந்த வாரம் வெளியேற மாட்டார். ஜித்தன் ரமேஷ் தான் வெளியேறுவார் என்ற பேச்சுக்களும் அடிபட்டு வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X