மறுபடியும் ஷிவானி அம்மா வருவாங்களா.. பாலாவுடன் படுக்கையறையில் ஆரி பற்றிய பேச்சு.. விளாசும் ஃபேன்ஸ்!

சென்னை: பாலா கூடவே நள்ளிரவிலும் படுக்கையறையில் அமர்ந்து ஆரி பற்றி பேசுவதை பார்த்த பிக் பாஸ் ரசிகர்கள் இருவரையும் விளாசி வருகின்றனர்.

இந்த வாரம் தான் ஃப்ரீஸ் டாஸ்க்கில் பாலாஜி கூட சேராமல், தனியா விளையாடு, அவன் பின்னால் சுற்றாதே என அடிக்காத குறையாக ஷிவானி அம்மா பேசி சென்றார்.

அந்த டாஸ்க் முடியுற வரை பாலா பக்கம் போகாத ஷிவானி மீண்டும் அதே வாரத்தில் பாலாவுடன் சேர்ந்து கொண்டதை பார்த்த ரசிகர்கள் கடுப்பாகி உள்ளனர்.

கடைசி வரை

கடைசி வரை

ஆஜீத் வெளியேறிய நிலையில், இன்னமும் ஷிவானியை உள்ளே வைத்திருப்பது காலக் கொடுமை தான். தனியா விளையாடு, ஏன் பாலா பின்னாடியே போற, அவன் நாமினேட் பண்றவங்களையே பண்ற, உனக்குன்னு ஒரு சுயபுத்தி கிடையாதா, தனியா விளையாட தெரியாதா என ஷிவானி அம்மா திட்டியும் கடைசி வரை ஷிவானி பாலாவுடன் கூட்டு சேர்ந்து தான் விளையாடுகிறார்.

நள்ளிரவில் படுக்கையறையில்

நள்ளிரவில் படுக்கையறையில் இருவரும் அமர்ந்து கொண்டு ஆரியை பற்றி பேச ஆரம்பித்தது, நாளைய நாமினேஷனுக்கான ஒத்திகை என்றே தெரிகிறது. இருவரும் பேசி வைத்துக் கொண்டு யாரையும் நாமினேட் பண்ண மாட்டோம் என பொய்யாக பேசி வரும் நிலையில், இப்படி நடந்து கொள்வது அவர்களுக்கே சரியாக இருக்கிறதா என்கிற கேள்வியைத்தான் எழுப்புகிறது.

சோம்பேறி விஷயம்

சோம்பேறி விஷயம்

ஆரி என்ன சோம்பேறி, டர்ட்டி கேம் ஆடுறன்னு சொன்னதும் தான் எனக்கு கோபம் வந்துடுச்சு, அதனால தான் கன்ட்ரோல் இல்லாமல் அப்படி பேசிட்டேன். அவர் என்கிட்ட பேருக்கு மன்னிப்பு கேட்டது எனக்கு கேட்கவே இல்லை. அதனால தான் வெளியே வந்து நான் கேட்டேன் என ஷிவானியிடம் பாலா அழுது புலம்புவது வேடிக்கையான ஒன்று தான்.

கமல் அதை மறந்துட்டாரு

கமல் அதை மறந்துட்டாரு

சோம்பேறின்னு ஆரி சொன்ன விஷயத்தை கமல் கேட்க மறந்துட்டாரு, ஏன்னா நீ அதுக்கு மேல பேக்கு, அடிமுட்டாள்னு பேசியது தான் காரணம் என ஷிவானி பாலாவுக்கு நல்லாவே கொம்பு சீவி விடுவதை கடைசியா காட்டியுள்ளனர். எத்தனை இரவுகள் இப்படி திட்டம் போட்டு பேசியிருப்பாங்கன்னு இப்போ தான் தெரியுது என ரசிகர்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.

ஷிவானி அம்மா வருவாங்களா

ஷிவானி அம்மா வருவாங்களா

மறுபடியும் ஒரு முறை ஷிவானி அம்மா வருவாங்களா, இந்த தடவை அவங்களை உள்ளே அனுப்பினா ஷிவானியோட சேர்த்து பாலாவுக்கு அறை நிச்சயம். பெத்த அம்மா அவ்ளோ சொல்லியும், கமல் சார் அவங்ககிட்ட உனக்காக வாதாடியும், ரம்யா கூட சேராமல், பாலா பின்னாடியே இரவு முழுக்க ஏன் இப்படி ரகசிய பிளான் போட்டு விளையாடுற ஷிவானி என திட்டித் தீர்த்து வருகின்றனர்.

மன்னிப்பை மறந்த பாலா

மன்னிப்பை மறந்த பாலா

சனிக்கிழமை மன்னிப்பு கேட்க வேண்டியது. ஞாயிற்றுக் கிழமை மறுபடியும் ஆரி பற்றி அவதூறாக பேச வேண்டியது. ஷிவானியே அந்த டாப்பிக்கை எடுத்தாலும், தயவு செஞ்சு விடுறியா, நானே இப்போதான் மன்னிப்பு கேட்டேன், இதையெல்லாம் மறந்து விளையாட ஆரம்பிக்கிறேன்னு சொல்ல தெரியல. இருவரும் ஆரியை மீண்டும் நாமினேட் செய்வது நிச்சயம் என்றே தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X