நீங்க ஒண்ணு நினைச்சீங்க.. அது கடைசியில வேற மாதிரி சொதப்பிடுச்சே ரியோ.. ஆனாலும் பார்த்து பேசுங்க!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவை பார்த்த நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
பிக்பாஸ் இரண்டாவது புரமோவில் ரியோ ஆஜித்தை ட்ரிகர் பண்ண முயற்சித்தார். ஆனால் அது அவருக்கே பேக் ஃபயராகிவிட்டது.
எதிர்பாராத விதமாக சனம் ஷெட்டியும் அனிதாவும் ரியோவை வைத்து காய்ச்சுகின்றனர். இதனால் கடுப்பான ரியோ ஓடிரு என சனம் ஷெட்டியை எச்சரித்து முறைக்கிறார். இதனை பார்த்த நெட்டிசன்கள், ரியோவை உண்டு இல்லை என செய்து வருகின்றனர்.

சனம் மிஷன் சக்ஸஸ்
சனம் மிஷன் சக்ஸஸ்... ரியோவ கோபப்படுத்தி அவர ஓடிருன்னு சொல்ல வச்சுட்டு.. இப்போ அய்யோ என்ன அப்யூஸ் பண்ணிட்டான்னு சொல்லி காலி பண்ணிருவா என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

இரிட்டேட்டிங் ரியாக்ஷன்
ரியோ நீ ஓடிரு உன்னோட மொக்க காமெடி அன்ட் இரிட்டேட்டிங் ரியாக்ஷன் ஃபேஸ் எடுத்துட்டு வராத.. என்று விளாசியுள்ளார் இந்த நெட்டிசன்.

கப்புலயே எழுதியாச்சு
கப்பு சனம் ஷெட்டிக்கு தான்னு கப்புலயே எழுதியாச்சு (கொளுத்தி போடுவம்) என சனம் பர்ஃபாமன்ஸை பார்த்து பங்கம் செய்துள்ளார் நெட்டிசன்.

பெண்களையாவது பண்ணட்டும்
ரியோ ராஜூக்கு ஆண்களை நேரடியா ஃபேஸ் பண்ண முடியாது.. அட்லீஸ்ட் வீட்டில் உள்ள பெண்களையாவது ஃபேஸ் பண்ணட்டும் என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்

ரொம்ப தப்புடா
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன் கேட்டதுக்கு மேலயே பதில் சொல்லிட்டேன் ஓடிரு.. அடேய் ரியோ இது எல்லாம் ரொம்ப தப்புடா.. அவங்க என்னதான் பேசுனாலும் வார்த்தைய பாத்து விடு என்று கூறியுள்ளார்.

சொதப்பிருச்சோ
என்ன ரியோ ராஜ்.. ஓடிருன்னு சொல்றீங்க.. எங்க ஓடணும்.. நீங்க ஒன்னு ட்ரை பண்ணீங்க.. எங்க ட்ரிகர் ஆகணும்னு நினைச்சீங்களோ.. அவங்க ஆனாங்களான்னு இல்லையான்னு தெரியல.. நீங்க பண்ணது சொதப்பிருச்சோன்னு பெரிய டவுட் இருக்கு பார்ப்போம்.. என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

ஓனர் இல்லை
என்னது ஓடிடா.. விஜய் டிவில நீ வேலைதான் பண்ணுறாய் விஜய் டிவி ஓனர் இல்லை நீ என்று எச்சரித்துள்ளார் இந்த நெட்டிசன்.

பிக்பாஸ் ஃபைட்டர்ஸ்டா
அனிதா அன்ட் சனம்.. அடுத்தவங்க பஞ்சாயத்தே 6 மணிநேரம் பேசுவோம்! எங்களுக்கே பஞ்சாயத்தா! செத்தாரு புலிக்கேசி ரியோ.. பிக்பாஸ் ஃபைட்டர்ஸ்டா !


Click it and Unblock the Notifications











