விலகி விடுங்கள்.. இல்லையேல் வீதிக்கு வந்துவிடுவீர்கள்.. விஜய் சேதுபதியை எச்சரிக்கும் நெட்டிசன்ஸ்!

சென்னை: முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்தால் அதோடு உங்கள் திரை வாழ்க்கையே முடிந்து விடும் என நடிகர் விஜய் சேதுபதிக்கு ரசிகர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நடிகர் விஜய் சேதுபதி, இலங்கை கிரக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கவுள்ளார்.
இதற்கான மோஷன் போஸ்டர் நேற்று வெளியானது.

முத்தையா முரளிதரன் ஈழத் தமிழர்களை கொன்று குவித்த ராஜ பக்சேவின் ஆதரவாளர் என்பதாலும் தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருப்பவர் என்பதாலும் விஜய் சேதுபதி முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

நிஜத்திலும் நடிகர்

நிஜத்திலும் நடிகர்

சமூக வலைதளங்களில் #ShameOnVijaySethupathi என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி ரசிகர்கள் தங்களின் எதிர்ப்பை பதிவிட்டு வருகின்றனர். முத்தையா முரளிதரனின் படத்தில் நடிப்பதன் மூலம் விஜய் சேதுபதி நிஜ வாழ்க்கையிலும் சிறந்த நடிகராகவே இருந்துள்ளார் என விளாசியுள்ளனர்.

படமாக பாருங்கள்

படமாக பாருங்கள்

எதுவுமே பேசாத கல் சிலைக்கு சாயம் பூசுவதற்கு கண்டனம் தெரிவிக்கும் வென்றுகள் தான் எங்கள் இனத்திற்கு எதிராக பேசப்போகும் படத்தை வெறும் படமாக மட்டும் பாருங்கள் என்கிறார்கள்.. என்று விளாசியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

'மாக்கள்' செல்வன்

'மாக்கள்' செல்வன்

விஜய் சேதுபதி முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிப்பதால் கடுப்பான இந்த நெட்டிசன், இன்று முதல் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி "மாக்கள் (விலங்குகள்) செல்வன்" என்று அழைக்கப்படுவார் என காட்டமாக கூறியுள்ளார்.

பிரபாகரன் மீது சத்தியம்

பிரபாகரன் மீது சத்தியம்

விஜய் சேதுபதியின் முடிவால் கடுப்பான இந்த நெட்டிசன், இனி எவ்வளவு அட்டகாசமான நடிப்பையும் படத்தையும் நீங்கள் கொடுத்தாலும் சரி.. இனி உங்கள் படம் பார்க்க திரையரங்கம் செல்ல மாட்டேன்.. இது எங்கள் தமிழ்தேசிய தலைவர் #பிரபாகரன் மீது சத்தியம் என கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

பயமாக உள்ளது

பயமாக உள்ளது

விஜய் சேதுபதியின் 800 படத்தின் மோஷன் போஸ்டரை பார்த்த இந்த நெட்டிசன் அவரை விட உங்களை பார்க்கதான் பயமாக உள்ளது எனது குறிப்பிட்டுள்ளார்.

சுமக்க மாட்டான்

சுமக்க மாட்டான்

மற்றொரு நெட்டிசனான இவர். என் வலியுணர்ந்த எவனும் என்னைக் கொன்றழித்த கொடியை நெஞ்சில் சுமக்கமாட்டான்..கனவில்கூட! என கூறியிருக்கிறார்.

நிக்காது ராஜா

நிக்காது ராஜா

விஜய் சேதுபதி முத்தையா முரளிதரனின் படத்தில் நடிப்பதால் கடுப்பான இந்த நெட்டிசன், திரையில் நடித்தான்
தரையிலும் நடித்தான் வேஷம் நீண்ட நாள் நிக்காது ராஜா என கூறியுள்ளார்.

எப்படியும் வாழலாம்

எப்படியும் வாழலாம்

விஜய் சேதுபதி, தமிழர்களுக்கு எதிரான முத்தையா முரளிதரன் படத்தில் நடிக்கவுள்ளதை பார்த்த இந்த நெட்டிசன் எப்படியும் வாழலாம்னு நினைச்சுட்டீங்கல்ல என கேட்டுள்ளார்.

வீதிக்கு வந்துவிடுவீர்கள்

வீதிக்கு வந்துவிடுவீர்கள்

டியர் விஜய் சேதுபதி முரளி 800 படத்தில் நீங்கள் பந்து வீசினால் விழப்போவது உங்கள் விக்கெட்டும்.. உங்கள் மார்க்கெட்டும் தான்..விலகி விடுங்கள் இல்லையேல் வீதிக்கு வந்துவிடுவீர்கள் என எச்சரித்துள்ளார் இந்த நெட்டிசன்.

நீயும் நானும்..

நீயும் நானும்..

சிங்கள பவுத்த மதத்தைக் கைப்பற்றி, தமிழர்களை அழித்தொழித்தவர்கள் வேறு யாருமல்ல...நடிகர் விஜய் சேதுபதியின் முன்னோர்களான திராவிட தெலுங்கு விஜய நகரப் பேரரசின் வாரிசுகளே. என்பதை உணர்ந்தால் நீயும் நானும் தமிழர்களே என பதிவிட்டு தனது எதிர்ப்பை காட்டியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

வெளி வராது..

வெளி வராது..

ஐபிஎல் போராட்டத்தை மறந்துவிட வேணாம்!
படத்தை வெளியிடும் திரையரங்குகளை வெறுமேன முற்றுகை மட்டும் இடமாட்டோம்.. சிங்களவன் சீருடையோடு சிங்கள கொடியோடு ஒரு போதும் வெளிவாரது.. என எச்சரித்து இருக்கிறார் இந்த நெட்டிசன்.

மக்கள் செல்வன் அல்ல

மக்கள் செல்வன் அல்ல

தமிழினத்தை மதிக்காத நீங்கள் மனிதனே அல்ல.. மனிதனாகவே இல்லாத போது நீங்கள் மக்கள் செல்வன் அல்ல.. உங்க ஸ்டைல்ல சொல்லனும்னா.. எச்ச என படு காட்டமாக விமர்சித்திருக்கிறார் இந்த நெட்டிசன்.

மக்கும் குப்பையாக..

மக்கும் குப்பையாக..

விஜய் சேதுபதி நடிக்கும் முரளிதரன் படத்தின் கதையை எழுதுவது ஒரு சிங்கள எழுத்தாளர்.. இதை மக்கும் குப்பையாக தமிழர்கள் தமிழர் மண்ணில் மாற்றுவோம்! என்று பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

திருந்துங்கள்..

திருந்துங்கள்..

முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில் இருந்து விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ள இந்த நெட்டிசன். திருந்துங்கள் சேதுபதி! இல்லையேல் திருத்தப்படுவீர்கள்! என எச்சரித்திருக்கிறார்.

டிப்ஸ் வைக்குறது ஒரு பக்கம்

டிப்ஸ் வைக்குறது ஒரு பக்கம்

விஜய் சேதுபதி இலங்கை கிரிக்கெட் வீரரின் படத்தில் நடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இந்த நெட்டிசன், திங்குறது ஒரு பக்கம்.. டிப்ஸ் வைக்குறது ஒருபக்கம் கொண்ட ஈன புத்தியாளன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

என் இனத்திற்கு எதுக்கு?

என் இனத்திற்கு எதுக்கு?

என் மாவீரனை மறைந்து இருந்து அவர் மக்களுக்காக பட்ட துயரத்தை பார்த்து இருந்தாலும்! இவன்! மாண்டால்தான் எங்களுக்கு நிம்மதி என்றிருப்பானா?பிணக்குவியலுக்கு நடுவில் மட்டைக்கு மண்டியிட்டு பணகுவியல் சேர்த்த இழிபிறவி இத்துரோகி வரலாறு என் இனத்திற்கு எதுக்கு? என கேட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X