அப்பாடா.. ஒரு வழியா கண்டு புடிச்சிட்டாங்க.. பிக் பாஸ் நிகழ்ச்சியை பங்கம் பண்ணும் மீம்கள்!

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் புரமோக்களை தினமும் பார்க்கும் ரசிகர்கள் அதை வைத்து மீம்களாக போட்டுத் தெறிக்கவிட்டு வருகின்றனர்.

கண்ணீரை வைத்து எப்படி காசாக மாற்றலாம், உணர்ச்சியை வைத்து எப்படி நல்லா விளையாடலாம் என்பதை பிக் பாஸ் நிகழ்ச்சி சூப்பராகவே கையாண்டு வருகிறது.

சர்ச்சைகளும், சண்டைகளும் தான் பிக் பாஸ் நிகழ்ச்சி இந்த அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் டிரெண்டாகவே காரணம்.

வீட்டுக்கு வருவதற்கு முன்பே

வீட்டுக்கு வருவதற்கு முன்பே

சுச்சி லீக்ஸ் மூலம் ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்தித்த பாடகி சுசித்ரா, பிக் பாஸ் வீட்டுக்கு வருவதற்காக குவாரண்டைனில் இருக்கிறார். சொகுசு வீட்டில் திடீரென இரவில் தன்னை யாரோ கொலை பண்ண வந்துட்டாங்கன்னு பிக் பாஸ் வீட்டுக்கு வருவதற்கு முன்பே போட்டியாளரை பற்றிய பேச்சுக்களை வைரலாக்குவது பிக் பாஸ் டீமின் முக்கிய வேலை.

இனிமே சண்டை கிடையாதா

இனிமே சண்டை கிடையாதா

இப்படி சர்ச்சைகளையும், சண்டைகளையும், அழுகாச்சி சீரியல்களையும் வைத்து இந்த பிக் பாஸ் சீசன் ஓடிக் கொண்டு இருப்பதை மீம் கிரியேட்டர்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர். அர்ச்சனாவுக்கும் பாலாவுக்கும் அப்படி ஒரு சண்டையை மூட்டி விட்டு, உடனே, அம்மா - பிள்ளை உறவாக மாற்றி போட்ட சீனை பார்த்த ரசிகர்கள், அவ்ளோதானா இனிமே சண்டை போட மாட்டீங்களா என வருத்தத்துடன் கேட்டு வருகின்றனர்.

போதி தர்மர் அர்ச்சனா

போதி தர்மர் அர்ச்சனா

பாலாவும் அர்ச்சனாவும் ஒன்றாக ஒரே அணியில் சேர்ந்து விட்டதை பார்த்த ரசிகர்கள், அர்ச்சனா அக்காவை போதி தர்மர் ரேஞ்சுக்கு உயர்த்தி விட்டனர். அப்பாவியாய் பார்க்கும் ரியோ ராஜையும் சும்மா விட்டு வைக்காம வச்சு செஞ்ச இந்த வைரல் மீம் வேற லெவலில் டிரெண்டாகி வருகிறது.

எமோஷனல் எபிசோடா

எமோஷனல் எபிசோடா

டிவி சிரீயல்களில் ஒரு வருடம் ஆர்ட்டிஸ்ட்கள் அழும் காட்சிகளை மூன்றே மாதங்களில் வைத்து செய்வது தான் பிக் பாஸ் நிகழ்ச்சி என்றும், பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய புரமோக்களை பார்த்த ரசிகர்கள் இன்னைக்கு எமோஷனல் எபிசோடா என்றும் மீம் போட்டு பிக் பாஸ் நிகழ்ச்சியை ஓட்டி வருகின்றனர்.

மேட்ச் ஃபவுண்ட்

மேட்ச் ஃபவுண்ட்

ஷிவானி நாராயணனும் பாலாஜி முருகதாஸும் மரத்தை சுத்தி டூயட் பாட எனக்கும் தான் ஆசை இருக்கு என விஐபி பாட்டுக்கு ரொமான்ஸ் பாடிட்டு இருக்கும் போது, அண்டர் லைன் பண்ணுங்க என மல்லாக்க படுத்துக் கொண்டு ரியோ சொன்ன அந்த ஒரு க்ளிப்பையும் நோட் பண்ணி, மேட்ச் ஃபவுண்ட் என மீம் போட்டு அசத்தி உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X