வெல்கம் டூ மாமியார் வீடு.. நெட்டிசன்ஸ் யார இப்படி வரவேற்திருக்காங்கன்னு பாருங்க!
Recommended Video
சென்னை: மீண்டும் சென்னை வந்துள்ள லாஸ்லியாவை அவரது ரசிகர்கள் தமிழகத்தின் மருமகளே என வரவேற்றுள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற லாஸ்லியா 100 நாட்களை பிக்பாஸ் வீட்டில் இருந்தார். நிகழ்ச்சியின் இறுதி வரை சென்ற லாஸ்லியா மூன்றாம் இடத்தை பிடித்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற சக போட்டியாளரான சேரனை சேரப்பா சேரப்பா என்று ஆரம்பத்தில் அழைத்த லாஸ்லியா, கவினை காதலிக்க தொடங்கிய பின் அவரது பாசத்தை வெறும் நடிப்பு என்றார்.

இலங்கை சென்றார்
இதனால் மக்களின் கோபத்திற்கு ஆளானார். இந்நிலையில் பிக்பாஸ் கொண்டாட்டம் எல்லாம் முடிந்த நிலையில் அண்மையில் தான் இலங்கை சென்றார்.

காதலுக்கு ஆதரவு
இந்நிலையில் மீண்டும் சென்னை வந்துள்ளார் லாஸ்லியா. இதனை பார்த்த அவரது ஆர்மியினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கவின் - லாஸ்லியா காதலுக்கு லாஸ்லியாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் ரசிகர்கள் கவிலியா ஆர்மி என்ற ஆர்மியை ஆரம்பித்து அவர்களின் காதலுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
நெட்டிசன்ஸ் டிவிட்
தற்போது லாஸ்லியா சென்னை வந்துள்ள நிலையில் அவரை மாமியார் வீட்டிற்கு வருக வருக என்றும், தமிழகத்தின் மருமகளே வருக வருக என்றும் வரவேற்று டிவிட்டி வருகின்றனர்.
மாமியார் வீடு
வெல்கம் பேக் டூ மாமியார் வீடு லாஸ்லியா என்று கூறியிருக்கிறார் இந்த ரசிகர்.
புள்ளீங்கோ
புள்ளீங்கோ நாங்க இருக்கோம் வேற என்ன வேணும் என்று கேட்கிறார் இந்த நெட்டிசன்.
தமிழகத்தின் மருமகளே
தமிழகத்தின் மருமகளே வருக வருக என்று பதிவிட்டிருக்கிறார் இந்த நெட்டிசன்.
இங்கேயே இருங்க
ப்ளீஸ் கவின உங்கக்கூட கூட்டிட்டு போங்க.. அல்லது நீங்க இங்கேயே இருங்க என்று கூறுகிறார் இந்தா ரசிகர்.
போட்டோ வேணும்
கவிலியா பெயர் ஒன்னா இருக்குற மாதிரி, ஒன்றாக உங்க போட்டோ எப்போ வரும் லியா, நாங்க அதுக்குதான் ரொம்ப நாளா வெயிட் பண்றோம் ப்ளீஸ்.. என்று கேட்டிருக்கிறார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











