இந்த நடிகையோட குடும்பம் இவ்ளோ பெருசா.. ஓணம் பண்டிகையால் வெளியான ஆச்சரியம்!

திருவனந்தபுரம்: ஓணம் பண்டிகையை முன்னிட்டு நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ள போட்டோ ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Recommended Video

Vijay ன் நீண்ட நாள் போராட்டம் வெற்றி

மலையாள மொழி மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஓணம் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது.

இதனை முன்னிட்டு அத்தப்பூ கோலமிட்டும், அறுசுவை உணவுகளுடன் பாரம்பரிய உடையணிந்து மலையாள மக்கள் ஓணம் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.

நடிகைகள் போட்டோ

நடிகைகள் போட்டோ

நடிகைகள் பலரும் தங்களின் ஓணம் கொண்டாட்ட போட்டோக்களை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து ரசிகர்களை குஷிப்படுத்தினர். அந்த வகையில் நடிகைகள் சாய் பல்லவி, மஞ்சிமா மோகன், ரெபா மோனிகா, ரம்யா நம்பீசன், முக்தா பானு உள்ளிட்ட பலரும் தங்களின் ஓணம் செலிபிரேஷனை ஷேர் செய்தனர்.

காதலருடன்

காதலருடன்

அந்த வகையில் நடிகை நயன்தாரா தனது காதலரான விக்னேஷ் சிவனுடன் ஓணம் திருநாளை கொண்டாடி மகிழ்ந்தார். அவரது போட்டோக்கள் சமூக வலைதளங்களை தெறிக்கவிட்டது. ட்ரென்டிங்கிலும் முதலிடம் பிடித்தது.

முதலில் குடும்பம்

முதலில் குடும்பம்

இந்நிலையில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது ஓணம் கொண்டாட்ட போட்டோக்களை ஷேர் சமூக வலைதளத்தில் ஷேர் செய்துள்ளார். முதலில் குடும்பம் என தனது குடும்பத்தினருடன் எடுத்த போட்டோக்களை வெளியிட்டுள்ளார்

ஃபேமிலி போட்டோ

ஃபேமிலி போட்டோ

குடும்பத்தில் உள்ள வயதானவர்கள் முதல் இளம் வயதினர் வரை அனைவருடனும் எடுக்கப்பட்டுள்ளது அந்த போட்டோ. அதன்படி அவரது குடும்பத்தில் மொத்தம் 13 பேர் உள்ளனர். கீர்த்தி சுரேஷும் அவரது சகோதரியும் மடியில் தங்களின் செல்ல நாய்களை அமர வைத்து போஸ் கொடுத்துள்ளனர்.

அடுத்து சாப்பாடு

அடுத்து சாப்பாடு

கீர்த்தி சுரேஷின் ஃபேமிலி போட்டோவை பார்த்த ரசிகர்கள் உங்கள் வீட்டில் இத்தனை பேரா என ஆச்சரியப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து ஓணம் ஸ்பெஷல் உணவுகளை இலையில் பரிமாறி அதையும் ஷேர் செய்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.

செம க்யூட்

செம க்யூட்

மேலும் பாரம்பரிய உடையில் விதவிதமான போஸ்களில் தனியாகவும் தனது சகோதரியுடனும், தன்னுடைய செல்ல நாயுடனும் போஸ் கொடுத்துள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ். அதனை பார்த்த நெட்டிசன்கள், செம க்யூட் என பாராட்டியுள்ளனர்.

கீர்த்தியின் பாட்டி

கீர்த்தியின் பாட்டி

கீர்த்தி சுரேஷின் இந்த போட்டோக்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறது. மேலும் ரசிகர்களால் அதிகளவில் ரீடிவிட்டும் செய்யப்பட்டு வருகிறது. கீர்த்தி சுரேஷின் பெற்றோர் திரை பிரபலங்கள் என்பதை தாண்டி, அவரது பாட்டி சரோஜா, தா தா 87 படத்தில் சாருஹாசனுடன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X