அட.. நம்ம நமீதாவா இது.. எப்படி இருந்தவர் இப்படி ஆயிட்டாரே!
Recommended Video
சென்னை: நடிகை நமீதாவின் நியூ லுக் போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் நமீதாவா இது என கேட்டு வாயை பிளந்து வருகின்றனர்.
நடிகை நமீதா தமிழில் எங்கள் அண்ணா படத்தின் மூலம் அறிமுகமானார். அந்தப் படத்தில் நடிகர் விஜயகாந்துடன் ஜோடி சேர்ந்தார்.
தொடர்ந்து விஜய், அஜித் என முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்தார் நமீதா. ஹைட்.. வெயிட்.. என தமிழ் சினிமாவில் கவர்ச்சி கன்னியாகவும் வலம் வந்தார்.

பிக்பாஸ் முதல் சீசனில்
ஆனால் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போன உடல் எடையால் படவாய்ப்புகள் இன்றி தவித்தார் நமீதா. இதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்றார்.

மீண்டும் சினிமாவில்
இதன் மூலம் பெரும் பிரபலமானார் நமீதா. கடந்த ஆண்டு தனது நீண்ட நாள் காதலரான வீரேந்திர சவுத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் ஒரு ரவுண்டு வந்துவிட வேண்டும் என தீவிரமாக இருந்து வருகிறார்.

புதிய போட்டோ
இதற்காக உடல் எடையை குறைக்க தொடர்ந்து வொர்க்கவுட் செய்து வருகிறார். இந்நிலையில் நமீதா தனது உடல் உடையை குறைத்த போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.
நியூ லுக் போட்டோஸ்
இதனை பார்த்த நெட்சடின்கள் அட நம்ம நமீதாவா இது.. எப்படி இருந்தவர் இப்படி ஆயிட்டாரே என வியந்து அவரின் பழைய போட்டோக்களுடன் ஒப்பிட்டு வருகின்றனர். நமீதாவின் நியூ லுக் போட்டோக்கள் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











