Vijay Sethupathi: கேவலமாக நடந்து கொள்ளும் இணையவாசிகள்.. கமெண்ட் ஆப்ஷனை ஆஃப் செய்த விஜய் சேதுபதி!

சென்னை: கடந்த சில தினங்களாகவே தமிழ் திரைத்துறை வட்டாரத்தில் பரபரப்பான ஒரு விஷயம் நடந்து வருகின்றது. அதாவது இயக்குநர் வெற்றி மாறன் தயாரித்துள்ள படம், பேட் கேர்ள். இந்தப் படத்தினை அவரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய வர்ஷா பரத் இயக்கியுள்ளார். படத்தின் டீசர் கடந்த 26ஆம் தேதி ரிலீஸ் ஆனது. டீசர் பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது. இது மட்டும் இல்லாமல் இயக்குநர் மோகன் ஜி உள்ளிட்ட பலர் மிகவும் மோசமாக விமர்சித்தும் வருகின்றனர். இப்படியான நிலையில் பேட் கேர்ள் படத்தின் டீசர் தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் விஜய் சேதுபதி பதிவிட்டிருந்தார். அதில் இணையவாசிகள் மோசமாக கமெண்ட் செய்ததால், கமெண்ட் ஆப்ஷனை விஜய் சேதுபதி ஆஃப் செய்து வைத்துள்ளார்.

பேட் கேர்ள் படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் அந்தப் படத்தின் இயக்குநர் வர்ஷா பரத் பேசியது பலரது கவனத்தினை ஈர்த்தது. அதாவது, காலம் காலமாக பெண் என்றால் பத்தினி, பூ, மிகவும் சாந்தமாக இருப்பவர் என கட்டமைத்து வைத்துள்ளனர். ஆனால் இந்த வரைமுறைகள் ஆண்களுக்கு இல்லை. மேலும் பெண் என்பவள் ஏற்கனவே கட்டமைத்து வைத்தது மட்டும் இல்லை. இந்தப் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தினை யாரும் முன் மாதிரியாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. மேலும் மிகவும் தைரியமான பெண் என்றாலும், அவள் தான் செய்யும் தவறுகளில் இருந்து மீண்டு வருகின்றாள். தான் எடுத்த தவறான முடிவுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்கின்றாள். மிகவும் சாதாரணமான பெண்ணின் கதைதான்" எனப் பேசினார்.

vijay sethupathi bad girl pa ranjith

பேட் கேர்ள்: படம் சர்வதேச திரைப்படத் திருவிழாவான ரோட்டர்டோம் திரைப்படத் திருவிழாவில் திரையிடப்படுவதற்கு தேர்வாகியுள்ளது. உலகத் தரம் வாய்ந்த படங்கள்தான் ரோட்டர்டோம் திரைப்படத் திருவிழாவில் திரையிடத் தேர்வாகும். அப்படி இருக்கும்போது பேட் கேர்ள் படத்தின் டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினைப் பெற்றுள்ளது. படத்தின் ரிலீஸ்க்காக ரசிகர்கள் மத்தியில் தனி எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால் படத்தின் டைட்டில், டீசர், டீசரில் இடம் பெற்ற வார்த்தைகள், காட்சிகள் குறித்து இயக்குநர் மோகன் ஜி கடுமையாக விமர்சித்தார். இன்னும் சொல்லப்போனால், படடம் இன்னும் ரிலீஸ் ஆகவே இல்லை. அப்படி இருக்கும்போது முன்முடிவாகவே படம் குறித்தும் படக்குழுவினர் குறித்தும் முறையற்ற தன்மையில் விமர்சித்துள்ளார்.

vijay sethupathi bad girl pa ranjith

கமெண்ட் செக்‌ஷன்: அதேபோல், நடிகை கஸ்தூரியும் மோகன் ஜி செய்ததைப் போலவே செய்துள்ளார். இந்தப் படத்தின் டீசர் குறித்து இயக்குநர் பா. ரஞ்சித், நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் தங்களது எக்ஸ் பக்கத்தியில் பதிவிட்டிருந்தனர். இப்படியான நிலையில் நடிகர் விஜய் சேதுபதியின் எக்ஸ் தளப் பதிவில் இணையவாசிகள் ஆபாசமாக கமெண்ட் செய்து வந்தனர். அப்படி இருக்கும்போது விஜய் சேதுபதி தனது எக்ஸ் தளப்பதிவின், கமெண்ட் செக்‌ஷனை ஆஃப் செய்து வைத்துள்ளார்.

அதிர்ச்சி: அதன் பின்னரும் விஜய் சேதுபதியின் எக்ஸ் தளப் பதிவினை ரீ போஸ்ட் செய்து அதில் மிகவும் மோசமாக கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் விஜய் சேதுபதி தனது மகளுடன் இருக்கும் புகைப்படத்தினைப் பகிர்ந்து பேட் கேர்ள் என பதிவிட்டு வருகின்றனர். இணையவாசிகள் சிலரின் இந்த கேவலமான செயல் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X