விடுதலை 2 VS குருதிப்புனல்.. நீ செத்தா பயம்தான் முளைக்கும்.. இணையத்தில் டிரெண்டாகும் வசனம்!

சென்னை: விடுதலை படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. இதைத்தொடர்ந்து விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் நேற்று வெளியானது. இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், கமல் நடித்த குருதிப்புனல் படத்தையும் விடுதலை 2 படத்தையும் இணைக்கும் வகையில் இணையத்தில் ஒரு வீடியோ ஒன்று இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

விடுதலை முதல் பாகத்தில், மலைப்பகுதியில் மக்கள் வசிக்கும் பகுதியில், சுரங்கம் அமைத்து வளங்களைச் சுரண்ட நினைக்கும் அயல் நாட்டு நிறுவனங்களுக்கு எதிராக மக்கள் படை ஒன்று உருவாகிறது. அதை தலைமை வகிக்கும் பெருமாள் வாத்தியார் என்கிற விஜய் சேதுபதி கதாபாத்திரத்தை சுற்றியே கதை நகர்கிறது. அந்த ஊருக்கு கான்ஸ்டபிளாக வரும் சூரி, பெருமாள் வாத்தியார் குறித்து துப்பு கொடுத்து அவர் கைதுசெய்ய காரணமாக அமைவதுடன் முதல் பாகம் நிறைவடைந்தது.

viduthalai 2 vijaysethupathi kuruthipunal 2

விடுதலை 2: அதைத்தொடர்ந்து இரண்டாம் பாகத்தில், பெருமாள் வாத்தியார் யார்? அவர் எப்படி இந்த தமிழர் மக்கள் படையைக் கட்டமைத்தார்? அவருக்கான அடிப்படைத் தத்துவக் கோட்பாட்டுகள் என்ன என்பதை இரண்டாம் பாகம் விவரிக்கிறது. வெற்றி மாறனின் கம்யூனிசம் பேசும் வசனம் திரையில் தீயாக இருக்கிறது. மேலும், படத்தை பார்த்த அனைவரும் வெற்றிமாறனின் நல்ல முயற்சியை வியந்து பாராட்டி வருகின்றனர்.

படத்தின் வசனம் : இந்நிலையில், விடுதலை 2 படத்தை பார்த்த இணையவாசி ஒருவர், இணையத்தில் கமல்ஹாசன் நடித்த குருதிபுனல் திரைப்படத்தின் கிளைமாக்ஸ் பதிவிட்டு, விஜய் சேதுபதி விடுதலை 2 சிறப்புக்காட்சி குறித்து பேசுவதை பார்க்கும் போது, குருதிப்புனலில் கமல் அமைத்திருக்கும் காட்சிதான் நியாபகம் வந்தது. அது தற்போது மிகப்பொருத்தமாக இருக்கும்.

பத்ரி: "நான் செத்தா விழற விதையில ஆயிரம் பத்ரி முளைப்பாங்க.."

ஆதி: அதெல்லாம் முளைக்க மாட்டாங்க..நீ செத்தா பயம்தான் முளைக்கும்..

"நீ கனவு கண்டுட்டிருக்கிற புரட்சி,இயக்கம் எல்லாம் என்னைக்கோ நீர்த்துப்போச்சு..

நீ செத்தா பயம்தான் முளைக்கும்: உனக்கு சித்தாந்தம் கத்துக்கொடுத்த பெரியவுங்கெல்லாம் செத்து போயிட்டாங்க,பாதி பேர் ரிட்டயர்டு ஆகிட்டாங்க. இப்ப மிச்சம் இருக்கிறது உன்னை மாதிரி ஆளுங்கதான். பொறிக்கிக்கும், போராளிக்கும் கலப்பு திருமணம் செஞ்சதுல பிறந்த புள்ள நீ. உனக்கப்புறம் உள்ள சந்ததியை உத்துப்பார். சினிமா பார்த்து வளர்ந்த பலகீனமான கூட்டம்தான் தெரியும். அவுங்கள அரசாங்கம் விலைக்கு வாங்கிடும் இல்லை மிதிச்சி நசுக்கிடும்.. என்று கமலும் நாசரும் பேசும் வசனம் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

குருதிபுனல்: பி. சி. ஸ்ரீராம் இயக்கத்தில் 1995ம் ஆண்டு வெளியான திரைப்படம் குருதிப்புனல், இப்படத்தில் கமல்ஹாசன், அர்ஜுன், கௌதமி, நாசர் போன்ற பலர் நடித்துள்ளனர். இப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியானது. இப்படத்தில் புரட்சிகரமான பல வசனங்கள் இடம் பெற்று இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X