என்னை கூகுளில் தேட தயாராகுங்கள்.. கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு கேப்ஷனில் கெத்து காட்டும் நடிகை!
Recommended Video
சென்னை: நடிகை ஷாலு ஷம்முவின் கவர்ச்சி போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் உருகியுள்ளனர்.
நடிகை ஷாலு ஷம்மு வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நாயகி ஸ்ரீதிவ்யாவுக்கு தோழியாக நடித்திருப்பார். பள்ளி மாணவியாக நடித்தார் ஷாலு ஷம்மு.
அதனை தொடர்ந்து தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தில் நகைச்சுவை நடிகர் சதீஷுக்கு ஜோடியாக நடித்தார். இதேபோல் சகலகலா வல்லவன் படத்தில் நடிகை அஞ்சலிக்கு தோழியாக நடித்தார்.

ஒவ்வொரு ரகம்
ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு ஷாலு ஷம்முவுக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் மற்ற நடிகைகளை போல கவர்ச்சி ஆயுதத்தை கையில் எடுத்தார் ஷாலு ஷம்மு. தொடர்ந்து கிளாமர் போட்டோ ஷுட்டுக்களை நடத்துவதும், அவற்றை சமூக வலைதளங்களில் வெளியிடுவதும் என இருந்து வருகிறார். அவர் வெளியிடும் ஒவ்வொரு போட்டோவும் ஒவ்வொரு ரகமாக உள்ளது.

சூடேற்றும் போட்டோஸ்
இந்நிலையில் நடிகை ஷாலு ஷம்மு ஒன் சைடு ஸ்லீவ்லெஸில் பாவாடை மற்றும் ஜாக்கெட்டை மட்டும் அணிந்து ஒய்யாரமாக போஸ் கொடுத்துள்ளார். ஒரே உடையில் வித்தியாசமான போஸ் கொடுத்துள்ள ஷாலு ஷம்மு அந்த போட்டோக்களை தனது டிவிட்டர் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார். அந்த போட்டோக்கள் ஒவ்வொன்றும் சூடேற்றும் வகையில் உள்ளது.
புறக்கணிக்க முடியுமா?
ஒவ்வொரு போட்டோவுக்கும் ஒரு கேப்ஷன் கொடுத்துள்ளார் ஷாலு ஷம்மு. அதில் என்னை புறக்கணிக்கிறீர்களா? கூகுளில் தேட தயாராகுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். அதனை பார்த்த நெட்டிசன்கள், உங்களை எப்படி புறக்கணிக்க முடியும்? நம் உடம்பில் உள்ள உறுப்பை யாராவது புறக்கணிக்க முடியுமா? நீங்கள் எங்களுக்குள் இருக்கிறீர்கள் என உருகியுள்ளனர்.
தேவையா?
உங்களைப் புறக்கணிப்பது சாத்தியமில்லை என்று நான் நினைக்கிறேன். ஒரு நல்ல வீக்கென்ட்டை கொண்டாடுங்கள் என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன். ஷாலு ஷம்முவின் இந்த போட்டோவை பார்த்து இவ்வளவு பெரிய டிரெஸ் தேவையா என கேட்டுள்ளார் இந்த நெட்டிசன். ஷாலு ஷம்முவின் இந்த போட்டோக்கள் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











