நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று சொல்லும் நயன்தாரா

Recommended Video

Nayanthara movie with Vignesh Shivan

சென்னை : இயக்குனர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் படம் தான் 'நெற்றிக்கண்'.இந்த படத்தை இயக்கி வருகிறார் 'மில்லிந் ராவ்' . முதன் முறையாக இயக்குனர் விக்னேஷ் சிவன் இந்த படத்தின் மூலம் தயாரிப்பாளாரக அறிமுகமாகிறார். இவரின் தயாரிப்பு நிறுவனத்திற்கு 'ரௌடி பிக்சர்ஸ்' என்று பெயர் வைத்துள்ளார்.

இந்த நெற்றிக்கண் தலைப்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 1981 ல் வெளியான ஒரு படத்திலே வைக்கபட்டுவிட்டது .இயக்குனர் கே.பாலசந்ததரின் கவிதாலயா தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் 1981ல் எஸ்.பி.முத்துராமன் இயகத்தில் படம் வெளிவந்தது. இந்த படத்தில் ரஜினிகாந்த் அப்பா மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருப்பார் ,ரஜினியுடன் லஷ்மி ,சரிதா ,மேனகா ,விஜயசாந்தி ,சரத்பாபு ஆகியோர் நடித்திருப்பார்கள் . இந்த படத்தில் பெண்ணிடம் தவராக நடந்து கொண்ட தந்தையை ,தனது தந்தை என்று அலச்சியம் காட்டாமல் அவர் செய்த தவறை உணர்த்தி அவர் செய்தது தவறு என்று உணர வைத்து நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே எனும் பழமொழிக்ககேற்ப அந்த படத்தை எடுத்து இருப்பார்கள்.

Netrikan movie shoot started.


தற்போது நயன்தாரா நடிக்கும் 'நெற்றிக்கண்' படத்திலும் குற்றத்திற்கு எதிரான கதையை மையப்படுத்தியே எடுத்து வருகிறார்கள் .படத்தின் முதல் பார்வை போஸ்டரை வைத்தே நம்மால் சில விசயங்களை கணிக்க முடிகிறது .படத்தில் நயன்தாரா கண் பார்வையற்ற மாற்றுதிரனாலியாக நடிக்கிறார் ஏனெனில் படத்தின் தலைப்பு பிரையல் எழுத்துகள் வடிவத்தில் கொடுக்க பட்டிருக்கும் ,பிரையல் எழுத்துகள் கண்பார்வை அற்றவர்கள் தன் விரல்களை பயன்படுத்தி படிக்க உதவும் ஒரு முறை .இதற்கு பின் தலைப்பை சுற்றி இரத்தமும் கரையுமாக இருக்கிறது மேலும் 'பி.டி.எஸ்.எம்' க்கு பயனபடுத்தபடும் களவி சாதனங்களும் அந்த இரத்ததை சுற்றி இருகின்றன. இதை வைத்து படத்தின் கதை எவ்வாறு எப்படி இருக்குமென பலரும் கணித்து வருகின்றனர்.

படத்தின் படப்பிடிப்பு தொவங்கும் போஸ்டரை நடிகை மோனிஷா ராமும் பதிவேற்றி நானும் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறேன் என்று கூறியுள்ளார். மோனிஷா ராம் 'ஓவியா'வுடன் 90எம்.எல் படத்தில் நடித்திருப்பார் . அந்த படம் பெண்களின் சுதந்திரம் ஒரினசேர்கையாளர் காதல் என புதுமையான கதைகளத்துடன் உருவாகி இருக்கும் .அந்த படம் வெளியான போது எதிர்மறையான விமர்சனங்களே படம் பெற்றது .எது எப்படியோ ட்ரெண்டிங்க்கான படங்கள் பண்ணுவதில் நயன்தாரா கெட்டிக்காரர். இப்போது அவருக்கு பக்க பலமாக இன்னும் சொல்ல போனால் பக்கா பலமாக விக்னேஷ் சிவன் இருப்பது கூடுதல் வெற்றி.

இவர்கள் திருமணம் பற்றி யோசிப்பதை விட இந்த சினிமாவில் எப்படி எல்லாம் இருவரும் சேர்ந்து சாதிக்கலாம் என்ற யோசனை தான் அதிகம். நெற்றிக்கண் சீக்கிரம் திறக்க வேண்டும் , திரை அரங்குகள் நிறைய வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X