6 மில்லியன் வியூஸ்களை கடந்த இதுவும் கடந்து போகும் பாடல்

சென்னை : நெற்றிக்கண் படத்தின் பாடல் இரு தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த பாடல் வெளியிடப்பட்டு 48 மணிநேரத்தில் 6 மில்லியன் வியூக்களை தாண்டியுள்ளது.

மனதை வருடும் வகையில் இந்த பாடல் உள்ளதாகவும் இந்த பாடல் வரிகளை எழுதியவருக்கு தேசிய விருது அறிவிக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

பார்வையற்றவராக நயன்தாரா

பார்வையற்றவராக நயன்தாரா

நயன்தாரா நடிப்பில் விக்னேஷ் சிவன் தயாரித்துவரும் படம் நெற்றிக்கண். மிலிந்த் ராவ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் நடிகை நயன்தாரா பார்வையற்றவராக நடித்து வருகிறார். கடந்த 9ம் தேதி இந்த படத்தின் முதல் சிங்கிள் வெளியிடப்பட்டு நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது.

இதுவும் கடந்து போகும்

இதுவும் கடந்து போகும்

முன்னதாக தயாரிப்பாளர் விக்னேஷ் சிவன் இதுகுறித்த அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார். இந்த பாடல் புண்பட்ட மனங்களை ஆற்றும் மருந்தாக காணப்படுகிறது. மேலும் தற்போதைய கொரோனா சூழல் விரைவில் கடந்து போகும் என்ற ஆறுதலையும் நம்பிக்கையையும் இந்த பாடல் அனைவருக்கும் கொடுத்து வருகிறது.

6 மில்லியன் பார்வைகள்

இந்நிலையில் இந்த பாடல் வெளியாகி 48 மணிநேரத்தில் 6 மில்லியன் வியூக்களை கடந்துள்ளது. லிரிக் வீடியோவாக வெளியிடப்பட்டுள்ள இந்த பாடலில் பிரண்ட்லைன் ஊழியர்கள், காவலர்கள் உள்ளிட்டவர்களை கௌரவப்படுத்தும் வகையில் அவர்களது புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிறப்பான வடிவமைப்பு

சிறப்பான வடிவமைப்பு

இந்த படத்தின் போஸ்டர்கள் கூட மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளன. பார்வையற்றவராக வரும் நயன்தாராவின் தன்னம்பிக்கையின் ஒளி அதிகமாக உள்ளது இந்த போஸ்டர்களின்மூலம் காணப்படுகிறது. மற்றொன்றில் கைப்பிடியுடன் கூடவே நாய் ஒன்றும் நயன்தாராவிற்கு பக்கபலமாக உள்ளதுபோல உள்ளது.

எதிர்பார்ப்பு அதிகரிப்பு

எதிர்பார்ப்பு அதிகரிப்பு

போஸ்டர்கள் மட்டுமின்றி படத்தின் தற்போதைய இதுவும் கடந்து போகும் பாடலும் படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. நயன்தாரா பார்வையற்றவராக வருவதும் படத்தின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. கதை குறித்த பல்வேறு விதமான யூகங்களையும் உருவாக்கியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X