இந்த மூணு பேரை மட்டும் வாழ்க்கையில மறக்காதீங்க... விஷ்ணு விஷால் கருத்து
சென்னை : நடிகர் விஷ்ணு விஷால் தொடர்ந்து சிறப்பான படங்களை கொடுத்து வருகிறார்.
தற்போது இவரது நடிப்பில் எப்ஐஆர் படம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நம்முடைய வாழ்க்கையில் மறக்கக்கூடாத 3 நபர்கள் குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஓடிடியில் எப்ஐஆர் படம்
நடிகர் விஷ்ணு விஷால் தொடர்ந்து தேர்ந்தெடுத்த படங்களில் நடித்து வருகிறார். இவரது ராட்சசன் படம் சிறப்பான விமர்சனங்களை பெற்றது. இவருடைய நடிப்பும் பேசப்பட்டது. இந்நிலையில் அடுத்ததாக இவரது நடிப்பில் எப்ஐஆர் படம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமூக பணிகள்
தொடர்ந்து ட்விட்டர் பக்கத்திலும் பரபரப்புடன் செயல்பட்டு வருகிறார் விஷ்ணு விஷால். ட்விட்டர் பக்கத்தின் மூலம் பல்வேறு சமூக பணிகளில் ஈடுபடுவதுடன் சக நடிகர், நடிகைகளின் புதிய படங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பது உள்ளிட்டவற்றையும் சிறப்பாக செய்து வருகிறார்.

விஷ்ணு விஷால் கருத்து
இந்நிலையில் நம்முடைய வாழ்க்கையில் மறக்கக்கூடாத 3 பேர் குறித்த கருத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். நம்முடைய கடினமான நேரத்தில் நமக்கு உதவியர்களையும், நம்முடைய கடினமான நேரத்தில் நம்மை விட்டு சென்றவர்களையும் மற்றும் நம்மை கடினமான நேரத்திற்கு அழைத்து சென்றவர்களையும் நாம் எப்போதும் மறக்கக்கூடாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
Recommended Video

வெற்றி படிக்கட்டில் ஏறுங்கள்
மேலும் தொடர்ந்து நம்முடைய பயணத்தை தொடரவும் வெற்றிப் படிக்கட்டுகளில் ஏறவும் தன்னுடைய கேப்ஷனில் வலியுறுத்தியுள்ளார். இதன்மூலம் கொரோனா ஏற்படுத்தியுள்ள நெருக்கடி சூழலில் மக்களின் மனதில் பாசிட்டிவிட்டியை பரப்பும் செயலில் அவர் ஈடுபட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











