எப்போதும் நெவர் சொல்லாதீங்க.. நீச்சலில் மகனின் புதிய சாதனை.. வீடியோ வெளியிட்ட மாதவன்!

சென்னை : நடிகர் மாதவன் இந்திய அளவில் சிறப்பான நடிகராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்.

தற்போது தன்னை இயக்குநராகவும் முன்னேற்றிக் கொண்டுள்ள மாதவன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியானது ராக்கெட்ரி.

இந்தப் படம் அவருக்கு விமர்சனரீதியாக சிறப்பாக கைக்கொடுத்துள்ளது.

நடிகர் மாதவன்

நடிகர் மாதவன்

நடிகர் மாதவன் இந்திய அளவில் சிறப்பான நடிகராக உள்ளார். இவரது பல படங்கள் ரசிகர்களை கட்டிப் போட்டவை. தமிழில் சமீபத்தில் வெளியான விக்ரம் வேதா படமும் இவரது அதிரடி நடிப்பை வெளிப்படுத்தியது. புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் வெளியான இந்தப் படம் நல்ல வெற்றியையும் பெற்றது.

இயக்குநராக சிறப்பு

இயக்குநராக சிறப்பு

தொடர்ந்து சிறப்பான பல படங்களில் நடித்துவந்த மாதவன், இயக்குநராகவும் தன்னை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். இவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ராக்கெட்ரி படம் நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது. முதல் படத்திலேயே பயோ பிக்கை எடுக்க அதிகமான தைரியம் வேண்டும். ஆனால் இதை சிறப்பாக செய்து முடித்துள்ளார் மாதவன்.

மாதவனின் மகன் வேதாந்த்

மாதவனின் மகன் வேதாந்த்

மாதவனுக்கு சரிதா என்ற மனைவியும் வேதாந்த் என்ற மகனும் உள்ளனர். இவரும் வாரிசு நடிகராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தன்னை மாற்றுத்தளத்தில் கொண்டு சென்று வருகிறார் வேதாந்த். சர்வதேச அளவில் நீச்சல் போட்டிகளில் கலந்துக் கொண்டு பல சாதனைகளை புரிந்து வருகிறார்.

நீச்சலில் வேதாந்த் தொடர் சாதனை

நீச்சலில் வேதாந்த் தொடர் சாதனை

கடந்த ஆண்டில் நடைபெற்ற லித்வியன் ஓபன் நீச்சல் போட்டியில் பங்கேற்று வெண்கலம் வென்ற வேதாந்த், கோபன்ஹேகனில் நடைபெற்ற டேனிஷ் நீச்சல் போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்டு வெள்ளிப்பதக்கத்தையும் வென்றார். தொடர்ந்து தேசிய மற்றும் சர்வதேச அளவில் நீச்சல் போட்டிகளில் பங்கேற்று வருகிறார்.

மாதவன் மகிழ்ச்சிப்பதிவு

இவரது சாதனைகளை அவ்வப்போது தன்னுடைய சமூக வலைதளப்பக்கங்களில் தொடர்ந்து மாதவன் பதிவிட்டு மகிழ்ச்சியை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது மாதவன் மீண்டும் மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார். நெவர் என்று ஒருபோதும் சொல்லாதீர்கள் என்று அவர் தன்னுடைய கேப்ஷனில் தெரிவித்துள்ளார்.

 வேதாந்த் தேசிய சாதனை

வேதாந்த் தேசிய சாதனை

தன்னுடைய மகன் வேதாந்த் 1500 மீட்டருக்கான தேசிய ஜூனியர் ரெக்கார்டை முறியடித்துள்ளதாக வீடியோவுடன் அவர் கூறியுள்ளார். தன்னுடைய மகன் பணத்தைக் கொட்டும் சினிமாவில்தான் வரவேண்டும் என்று நினைப்பவர்கள் மத்தியில், அவருக்கு பிடித்தமான பீல்டில் அவரை சாதிக்க துணை நிற்கும் மாதவன் உண்மையில் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டானவர்தான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X