மோடி மாதிரி நாட்டுக்காக யாராலும் உழைக்க முடியாதாம்: சொல்கிறார் 'முதல்வன்' பட நடிகர்
மும்பை: பிரதமர் மோடி போன்று நம் நாட்டிற்காக யாராலும் உழைக்க முடியாது என்று நடிகர் அனில் கபூர் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் பிரபலங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கும் வாய்ப்பு அடிக்கடி கிடைத்து வருகிறது. இந்நிலையில் நடிகர் அனில் கபூர் மோடியை சந்தித்து பேசியுள்ளார்.

அந்த சந்திப்பின்போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அந்த சந்திப்பு குறித்து அனில் கபூர் கூறியிருப்பதாவது,
மோடிஜியை சந்தித்ததில் மகிழ்ச்சி. அவரை சந்திக்க வேண்டும் என்று கடந்த 2 ஆண்டுகளாக நினைத்திருந்தேன். ஆனால் அது நடக்கவில்லை. அவர் ஒரு இன்ஸ்பிரேஷன். நம் நாட்டிற்காக மோடி அளவுக்கு கடுமையாக உழைக்கும் நபரை நான் பார்த்தது இல்லை என்றார்.
ஷங்கர் இயக்கிய முதல்வன் படத்தின் இந்தி ரீமேக்கான நாயக்கில் நடித்தவர் அனில் கபூர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments


Click it and Unblock the Notifications