சினிமா பிஆர்ஓ யூனியன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு... திரைத்துறையினர் வாழ்த்து!
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சினிமா பிஆர்ஒ யூனியன் நிர்வாகிகள் பதவியேற்றனர்.
Recommended Video

சென்னை: தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் யூனியன் தேர்தலில் வெற்றிப்பெற்ற நிர்வாகிகள் பதவியேற்றுக்கொண்டனர்.
தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் யூனியனுக்கு இரண்டாண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி 2018 - 2020ம் ஆண்டுக்கான நிர்வாகிகள் தேர்தல் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட மூத்த பிஆர்ஓ விஜய முரளி வெற்றி பெற்றார். பொதுச்செயலாளராக பெருதுளசி பழனிவேல் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த முறையும் இந்த பதவியை வகித்தவர் இவர்.

பொருளாளராக யுவராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டார். துணைத்தலைவர்களாக கோவிந்தராஜ் மற்றும் ராமானுஜமும், இணை செயலாளர்களாக குமரேசன் மற்றும் ஆனந்த் ஆகியோர் தேர்வுசெய்யப்பட்டனர்.
செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களாக வி.பி.மணி, கிளாமர் சத்யா, மதுரை ஆர்.செல்வம், நிகில்முருகன், என்.சரவணன், வி.எம்.ஆறுமுகம், சாவித்திரி, எஸ்.ஷங்கர், கே.செல்வகுமார் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இவர்கள் அனைவருக்கும் தேர்தல் அதிகாரி கிரிதரன் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்களை வழங்கினார். தயாரிப்பாளர் சங்கம்,
இயக்குனர்கள் சங்கம், ஒளிப்பதிவாளர்கள் சங்கம், ஃபெப்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் புதிய நிர்வாகிகளை வாழ்த்தினர்.


Click it and Unblock the Notifications











