Don't Miss!
- News
தமிழ்நாடு மாணவர்களுக்கு எத்தனை இன்னல்கள்.. அஞ்சல் தேர்வு படிவத்தில் குளறுபடி.. சு.வெங்கடேசன் கண்டனம்
- Sports
1.5 வருட காத்திருப்புக்கு நியாயம் கிடைக்குமா? கே.எஸ்.பரத் vs இஷான் கிஷான்.. யார் விக்கெட் கீப்பர்??
- Technology
5ஜி போன் இல்லையா? அப்போ உங்க காட்டில் மழைதான்! அறிமுகமானது Infinix Zero 5G 2023 சீரிஸ்!
- Finance
விடாமல் துரத்தும் Layoff.. Pinterest, ஆட்டோடெஸ்க் அறிவிப்பு.. பீதியில் டெக் ஊழியர்கள்..!
- Lifestyle
கொலஸ்ட்ரால் மற்றும் பிபி-க்கு முற்றுப்புள்ளி வைக்கும் 'வெங்காய டீ'.. அதைத் தயாரிப்பது எப்படி?
- Automobiles
டாடா எடுத்த திடீர் முடிவு... உற்சாகத்தில் துள்ளி குதிக்கும் வாடிக்கையாளர்கள்!
- Travel
சென்னை to டெல்லி விமான பயணமா - டிக்கெட்டுகளின் விலை உயர்த்தப்பட்டது பற்றி உங்களுக்கு தெரியுமா?
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
அமீர்கான், மகேஷ் பாபுன்னு பிரபலங்களே தேடிப் போறாங்களே.. யார் இந்த 25 வயசு பொண்ணு நிஹாரிகா?
பெங்களூரு: எம்பிஏ படிப்பை படித்து முடித்து விட்டு யூடியூபராக தனது பயணத்தை ஆரம்பித்த நிஹாரிகா இன்று இந்தியாவின் நம்பர் ஒன் இன்ஃப்ளூயன்ஸராக வளர்ந்து நிற்கிறார்.
பாலிவுட் நடிகர் அமீர்கான் முதல் டோலிவுட் நடிகர் மகேஷ் பாபு என பலரும் தங்கள் படங்களின் புரமோஷனுக்காக இந்த இன்ஃப்ளூயன்ஸரை சமீப காலமாக பயன்படுத்தி வருவது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.
கோலிவுட்டிலும் பலர் நிஹாரிகாவை அணுகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
“சொல்லுங்க…
சொல்லுங்க…
தளபதி
விஜய்யை
சந்திச்சது
உண்மையா?”:
துல்கர்
சல்மானின்
பதில்
இதுதான்!

யார் இந்த நிஹாரிகா
காமெடியன், யூடியூபர் என பன்முகத்தன்மை கொண்ட நிஹாரிகா பெங்களூருவை சேர்ந்தவர். பாலிவுட், டோலிவுட் என புரமோஷன்களில் பட்டையைக் கிளப்பி வருகிறார். புதிய படங்களை புதிய முறையில் புரமோட் செய்ய பெரிய பெரிய நடிகர்களே இவரை அணுகி வருவது தான் ஹைலைட். இன்ஸ்டாகிராமில் நடிகைகளுக்கு இணையாக இவரை 2.8 மில்லியன் ரசிகர்கள் ஃபாலோ செய்து வருகின்றனர்.

அமீர்கான் கழுத்தைப் பிடித்து
அமிர்கானின் லால் சிங் சத்தா படம் வரும் ஆகஸ்ட் 11ம் தேதி திரைக்கு வருகிறது. தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என 5 மொழிகளில் வெளியாகும் அந்த படத்துக்கு சமீபத்தில் நிஹாரிகா வேறலெவல் புரமோஷன் செய்துள்ளார். அமீர்கானின் கழுத்தை பிடித்தப்படியெல்லாம் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

மகேஷ் பாபுவுடன் சாண்ட்விச்
சர்காரு வாரி பாட்டா படத்திற்காக மகேஷ் பாபுவுக்கு பெரிய அளவில் புரமோஷன் செய்து கொடுத்தார் நிஹாரிகா. அவருடன் அமர்ந்து சாண்ட்விச் சாப்பிடுவது. சர்காரு வாரி பாட்டாவின் ஹைலைட்டான அத்தனை சாவிகளை தேடி எடுப்பது என ஏகப்பட்ட காமெடி வீடியோக்களை பதிவிட்டு நெட்டிசன்கள் மத்தியில் படத்தை பார்க்க தூண்டும் வேலைகளை செய்து வருகிறார்.

யஷ்ஷுக்கே இவங்க தான் பாஸ்
பெங்களூரு பொண்ணாக இருந்து கொண்டு கேஜிஎஃப் படத்துக்கும் அந்த படத்தின் நாயகன் யஷ்ஷுக்கும் புரமோஷன் பண்ணாமல் இருப்பாரா? என்ன? சும்மா கிழி கிழி என கேஜிஎஃப் 2 படத்துக்கு புரமோஷன் பண்ண அந்த பெரியம்மாவே இவங்க தான் என நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

ஆலியா பட் கோச்சிக்க மாட்டாங்களே
ரன்பீர் கபூர் டேட் என சொன்னாரு, ஆனால், எந்த டேட்னு சொல்லல என அவருக்காக மணமகள் போல ரெடியாகி நிற்கும் நிகாரிகாவை தோளோடு தொட்டு அனைத்து ரன்பீர் கபூர் பேசும் புகைப்படங்களை வெளியிட்டு டிரெண்ட் செய்து ஷம்ஷீரா படத்துக்கு இவர் புரமோஷன் செய்தும் படத்தை காப்பாற்ற முடியவில்லை. ரொம்ப நெருங்காதீங்க ஆலியா பட் கோச்சிக்க போறாரு என நெட்டிசன்கள் கலாய்த்தது தான் மிச்சம்.

கேன்ஸில் விருது
கேன்ஸ் திரைப்பட விழாவில் யூத் ஐகான் விருதையே தட்டிச் சென்றுள்ளார் நிஹாரிகா. டிஜிட்டலில் கன்டென்ட்களை புதிய புதிய ஐடியாக்களை யோசித்து க்ரியேட் செய்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிஹாரிகா சமீபத்தில் நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு ரெட்கார்ப்பெட்டை மட்டும் அலங்கரிக்காமல் யூத் ஐகான் விருதையும் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. சித்தார்த் உள்ளிட்ட கோலிவுட் நடிகர்களுக்கும் இவர் புரமோஷன் செய்துள்ளார். மேலும், பல கோலிவுட் பிரபலங்களும் இவரை அணுகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.