சுல்தானின் அடுத்த விருந்து எப்போ தெரியுமா...அசத்தல் அப்டேட் வெளியிட்ட படக்குழு
சென்னை : கார்த்தி நடித்த சுல்தான் படத்தின் 3 சிங்கிள் டிராக் பாடல்களின் வெற்றியை தொடர்ந்து, படத்தின் ட்ரைலரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. மார்ச் 24 அன்று மாலை 5 மணிக்கு ட்ரைலர் வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ட்ரைலரும் ரசிகர்களை பெரிய அளவில் கவரும் விதமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் விதமாக இப்படத்தின் கதையை டைரக்டர் பாக்யராஜ் கண்ணன் உருவாக்கி உள்ளார். ட்ரீம் வாரியர்ஸ் இயக்கும் பிரம்மாண்ட படம் இது என கூறப்படுகிறது. ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்கும் இந்த படத்தில் நெப்போலியன், லால், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏப்ரல் 2 ம் தேதி சுல்தான் படம் தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

படத்தின் ரிலீசிற்கு முன்பாகவே பாடல்கள் ஹிட்டாகி இருப்பதால் படக்குழுவினர் படுகுஷியாகி உள்ளனர். படமும் மிகப் பெரிய ஹிட்டாக அமையும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











