பேட்மேன் நடிகர் ராபர்ட் பேட்டின்சனுக்கு கொரோனா.. தொடங்கிய வேகத்தில் நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு
லாஸ் ஏஞ்சல்ஸ்: பேட்மேன் ஹீரோ ராபர்ட் பேட்டின்சனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
Recommended Video
நடிகர் ராபர்ட் பேட்டின்சனுக்கு கொரோனா தொற்று பரவியதை அடுத்து, லாக்டவுனுக்கு பிறகு ஆரம்பிக்கப்பட்ட பேட்மேன் பட ஷூட்டிங் உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது.

புது பேட்மேன்
சமீபத்தில் நடத்தப்பட்ட டிசி ஃபேன் டோம் நிகழ்ச்சியில் தான் ராபர்ட் பேட்டின்சன் பேட்மேனாக நடித்த தி பேட்மேன் படத்தின் அதிரடி ட்ரைலர் வெளியிடப்பட்டு, உலகளவில் உள்ள பேட்மேன் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆக்ஷன் விருந்து கொடுத்து இருந்தது. பேட்மேன் படம் மட்டுமின்றி வொண்டர் வுமன் 2ம் பாகம், ராக்கின் சூப்பர் ஹீரோ படமான பிளாக் ஆடம் உள்ளிட்ட படங்களின் டீசர் மற்றும் ட்ரைலர்கள் வெளியிடப்பட்டன.

சொல்ல மறுத்த தயாரிப்பு நிறுவனம்
பேட்மேன் படத்தின் ஷூட்டிங், நடிகர் ஒருவருக்கு கொரோனா தொற்று பரவிய நிலையில், நிறுத்தப்பட்டுள்ளது என்பதை மட்டுமே தயாரிப்பு நிறுவனமான வார்னர் பிராஸ் தெரிவித்துள்ளது. நடிகர் ராபர்ட் பேட்டின்சனுக்கு கொரோனா பரவிய தகவலை அவர்கள் தெரிவிக்க மறுத்துள்ளனர்.

ராபர்ட் பேட்டின்சனுக்கு கொரோனா
இந்த மாதம் செப்டம்பர் 1ம் தேதி தான் இங்கிலாந்தில் மீண்டும் ஷூட்டிங் நடத்த அனுமதி வழங்கப்பட்டது. உடனடியாக ராபர்ட் பேட்டின்சனின் பேட்மேன் படத்தின் ஷூட்டிங் தொடங்கியது. இந்நிலையில், நடிகர் ராபர்ட் பேட்டின்சனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது அந்த படத்தின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது.

உயிரிழப்பு
கடந்த மாதம் ஆஸ்டின் நகரில் விளம்பர பட ஷூட்டிங் நடத்தப்பட்ட நிலையில், அந்த குழுவில் இருந்த ஒருவர் மூலம் பரவிய கொரோனா தொற்று காரணமாக, தொழில்நுட்ப கலைஞர் ஒருவர் உயிரிழந்தது, திரையுலகினருக்கு பேரதிர்ச்சி கொடுத்தது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்னமும் பெரிய படங்களின் ஷூட்டிங் தொடங்க அனுமதி கொடுக்கப்படவில்லை.

ராக்குக்கு கொரோனா
'தி ராக்' என ரசிகர்களால் அழைக்கப்படும் பிரபல ஹாலிவுட் நடிகர் டுவைன் ஜான்சன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கடந்த இரு வாரங்களாக கொரோனா தொற்று இருப்பதாக நேற்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மற்றொரு முன்னணி நடிகருக்கு கொரோனா பரவிய செய்தி ஹாலிவுட் ரசிகர்களையும் தயாரிப்பாளர்களையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.


Click it and Unblock the Notifications











