நடிகை ஆபாச பட விவகாரம்.. மிரட்டி நடிக்க வைத்தார்.. பிரபல மாடல் பரபரப்பு புகார்.. 9 பேர் கைது!

By

மும்பை: ஆபாச படம் எடுத்தது தொடர்பாக நடிகை கைது செய்யப்பட்ட விவகாரத்தில் தன்னை மிரட்டி நடிக்க வைத்ததாக, பிரபல மாடல் புகார் தெரிவித்துள்ளார்.

தமிழில் வெளியான 'பேய்கள் ஜாக்கிரதை' படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தவர், இந்தி நடிகை கெஹனா வசிஸ்த்.

இந்தியில் பல படங்களில் நடித்துள்ள அவர், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

இணையதளம்

இணையதளம்

இப்போது, இந்தி டிவி சீரியல்கள் மற்றும் பல வெப் தொடர்களில் நடித்து வருகிறார். மிஸ் ஆசிய பிகினி டைட்டிலை வென்ற கெஹனா, பல விளம்பர படங்களிலும் நடித்திருக்கிறார். இவர், பணம் கட்டி பார்க்கும் இணையதளம் ஒன்றை தொடங்கி, அதில் ஆபாச படங்களைப் பதிவேற்றி உள்ளார்.

பங்களாவில் சோதனை

பங்களாவில் சோதனை

இதற்கு ரூ.2000 கட்டணம் செலுத்தி சந்தாதாரர் ஆகவேண்டும். இதில் ஏராளமானவர்கள் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர். அவர்களுக்காக, சிலருடன் இணைந்து ஆபாச படங்களை தயாரித்துள்ளார். இதையடுத்து போலீசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து, மும்பை மலாட்- மல்வானி பகுதியில் இருக்கும் பங்களா ஒன்றில் சோதனை நடத்தினர்.

கெஹனா வசிஸ்த்

கெஹனா வசிஸ்த்

அப்போது, அங்கு தனி அறையில் ஆபாச படம் எடுப்பது தெரியவந்ததை அடுத்து கெஹனா வசிஸ்த்தை கைது செய்தனர். மேலும் அங்கிருந்த நடிகர்கள், ஒரு பெண் புகைப்படக் கலைஞர், டிசைனர் ஆகியோரையும் கைது செய்தனர். இளம் பெண் ஒருவர் மீட்கப்பட்டார். இந்நிலையில் மாடல் ஒருவர், தன்னை மிரட்டி, ஆபாச படத்தில் நடிக்க வைத்ததாக பரபரப்பு புகார் அளித்தார்.

21 வயது மாடல்

21 வயது மாடல்


ஜார்க்கண்டில் நடந்த அழகி போட்டியில் வென்ற 21 வயது மாடல் அவர். மும்பையில் தங்கி சினிமா வாய்ப்பு தேடி வந்தார். அவரை ஓ.டி.டிக்காக எடுக்கப்படும் படங்களில் நடிக்க வைப்பதாக சிலர் நம்ப வைத்தனர். பின்னர் அவரை மிரட்டி, ஆபாச படத்தில் நடிக்க வைத்துள்ளனர். இதுதொடர்பாக அவர் மும்பை போலீசில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

ஆபாச காட்சியில்

ஆபாச காட்சியில்

அதில் அவர், யாஷ்மின் ரோவா கான் என்ற பெண், ஓ.டி.டியில் நடிக்க வைப்பதாக ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கினார். பின்னர் ஆபாச படத்தில் நடிக்கக் கட்டாயப்படுத்தியதால் அதிர்ச்சி அடைந்தேன். அதற்கு மறுத்ததும் போலீசில் புகார் அளிப்பதாக மிரட்டினார். பின்னர் ஆபாச காட்சியில் நடிக்க வைத்தனர். யாஷ்மின் உள்ளிட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

9 பேர் கைது

9 பேர் கைது

இதையடுத்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேலும் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். இதுபோன்று மிரட்டி ஆபாச படம் எடுத்ததாக யாஷின் ரோவா கான் என்பவர் மீது, முன்று பெண்கள் புகார் கொடுத்துள்ளனர். இந் நிலையில், இந்த வழக்கில், ஆபாச படங்களை இயக்கிய தன்வீர் ஹாஷ்மி, யாஷின், அவர் கணவர் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X