பேட்டி தர சம்பளம் கொடுக்கவேண்டும் - நடிகர் சங்க கூட்டத்தில் அதிரடி முடிவு!
சென்னை : தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பாக முன்வைக்கப்பட்ட விஷயங்களை ஆலோசனை செய்யும் விதமாக, மவுன்ட் ரோட்டில் அமைந்திருக்கும் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடிகர் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் நாசர், விஷால், கார்த்தி, பொன்வண்ணன் உள்ளிட்ட நடிகர் சங்க நிர்வாகிகளும், உறுபிப்பினர்களும் கலந்துகொண்டனர். திரையுலக ஸ்ட்ரைக்கின்போது முன்வைக்கப்பட்ட பல பிரச்னைகளும் இந்தக் கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டன.

தயாரிப்பாளர்களின் செலவினங்களைக் குறைக்கும் விதமாக நடிகர்கள் சம்பளத்தைக் குறைக்கவேண்டும் என்பது தயாரிப்பாளர்களின் வேண்டுகோளாக இருக்கிறது. அது குறித்து இந்தக் கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.
கூட்டம் முடிந்தபிறகு பேசிய தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொருளாளர் கார்த்தி, "திரைப்படத்தின் வருமானம், லாபத்தை வைத்து நடிகர்களின் சம்பளம் நிர்ணயிக்கப்படும்; ஊதிய நிர்ணயம் விரைவில் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் அமல்படுத்தப்படும்" எனத் தெரிவித்தார்.
மேலும், பேட்டி கொடுக்கும் நடிகர்களுக்கு தொலைக்காட்சி நிறுவனங்கள் பணம் கொடுக்க வேண்டும் எனவும் சென்னையில் நடைபெற்ற தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் இடையேயான பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











