துண்டை பார்ப்பேனா... உன்னை பார்ப்பேனா... குழப்பத்தில் குளியல் காட்சியில் 13 'டேக்' வாங்கிய கதாநாயகி
சென்னை: இசக்கி படத்தில் வரும் ஒரு குளியல் காட்சிக்காக 13 முறை டேக் வாங்கினாராம் அதன் கதாநாயகி ஆஷிதா.
மெரிட் மீடியா நிறுவனம் தயாரிப்பில், எம்.கணேசன் என்ற அறிமுக டைரக்டர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்டு செய்யும் படம், 'இசக்கி.'
தமிழில் இனிது இனிது உள்பட சில படங்களில் நடித்த சரண், இந்த படத்தின் கதாநாயகனாக நடிக்கிறார். ஆஷிதா என்ற புதுமுகம் கதாநாயகியாக நடிக்கிறார்.

அப்படியே ஷாக் ஆயிட்டேன்...
படத்தில் இடம்பெறும் ஒரு காட்சியில், ஆஷிதா வீட்டு ஹாலில் கதாநாயகன் அமர்ந்திருக்கிறார். அது தெரியாமல், ஆஷிதா குளித்துவிட்டு ஒரு துண்டை மட்டும் உடம்பில் கட்டிக்கொண்டு குளியல் அறையில் இருந்து வெளியே வர வேண்டும்.

கூச்சல் போடனும்...
எதிர்பாரா விதமாக கதாநாயகன் அமர்ந்திருப்பதைப் பார்த்ததும் அவர் அதிர்ச்சியில் சத்தம் போடுகிறார்.

ரொம்ப கவனமா நடி...
இந்த காட்சியை படமாக்கும்போது கதாநாயகி கட்டிக்கொண்டிருந்த துண்டு கீழே விழாமல் பார்த்துக்கொள்ள வேண்டுமாம்.

யதார்த்தத்துக்காக 13 முறை...
காட்சியில் கதாநாயகி யதார்த்தமாக நடிக்க வேண்டும் என்பதால், அந்த காட்சி 13 'டேக்'குகள் எடுக்கப்பட்டதாம்.

ஸ்ரீகாந்த் தேவா இசை...
இக்காட்சியை சசிகுமார் ஒளிப்பதிவு செய்தார். சென்னை, மதுரை, காரைக்குடி, திண்டுக்கல், ஊட்டி ஆகிய இடங்களில் வளர்ந்த இந்த படத்துக்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார்.


Click it and Unblock the Notifications











