twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஒரே ஒரு சீன்தான்.. எப்படி பண்ணிருக்கோம் பாருங்க.. மிரள வைக்கும் நடிப்பில் கண்ணதாசன் பேரன்

    |

    சென்னை: மொத்தப் படமும் ஒரு சீன்தான். அதை அப்படி டெவலப் பண்ணி எடுத்திருக்கிறோம். அருமையாக இயக்கியிருக்கிறார் இயக்குநர் என்று சிலாகிக்கிறார் முத்தையா கண்ணதாசன்.

    கவிஞர் கண்ணதாசனின் முகத்தை அச்சில் வார்த்தார்போல் இருக்கிறார் முத்தையா கண்ணதாசன். பேரனாச்சே.. இருக்காதா பின்னே.. முதல்படம் 'யாதெனக் கேட்டேன்' நடித்து முடித்த மகிழ்ச்சியில் இருந்த முத்தையா நடிப்புலக அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.

    தாத்தா கவிதைகளில் மிரட்டினார் என்றால் பேரன் நடிப்பில் மிரட்டியிருக்கிறாராம். அந்த அனுபவத்தை அவர் நம்மிடம் விவரித்தபோது...

    பாக்கியம்

    பாக்கியம்

    கண்ணதாசன் பேரன் என்பதே எனக்குக் கிடைச்ச பெரும் பாக்கியம். ஒரே தங்கை. ஆர்கிடெக்சர். படிப்புல நிறைய ஆர்வம் இருந்தது. நல்லா படிச்சு,எம்.பி.ஏ. முடிச்சு, ஒரு நிறுவனத்திலும் வேலை செய்தேன். அதுவரைக்கு சினிமா ஆசை இல்லை. ஆனால், ப‌டங்கள் நிறைய பார்ப்பதன் விளைவு நடிக்கவும் ஆசை வ‌ந்தது.

    முதல் வாய்ப்பு

    முதல் வாய்ப்பு

    அப்பா சொல்லி, டைரக்டர் ஐ.எஸ்.ஆர் ,செல்வகுமாரைப் போய் பார்த்தேன். அவர் மறைந்த நகைச்சுவை நடிகர் ஐ.எஸ்.ஆரின் மகன். ரிகர்சலில் என் நடிப்பு அவர்களுக்கும் திருப்தியானதால், ப‌டத்தில் நடிக்கும் வாய்ப்பைப்பெற்றேன்.

    படம் பற்றி

    படம் பற்றி

    அழகான ஒரு குடும்பத்திற்குள், தான் யார் என்று சொல்லாமலேயே வீட்டுக்குள் நுழைகிறார் ஒரு விசித்திர மனிதர். யாரேனும் கேள்வி எழுப்பினால், அவர்களின் ரகசியப் பிரச்சனைகளை வெளியில்சொல்லி அதிர வைத்து அதற்குரிய தீர்வையும் தருகிறார்.

    தேடி வரும் மனிதர்

    தேடி வரும் மனிதர்

    ஒருநாள் , போலீஸ் அந்த‌ விசித்திரமனிதரை தேடி வருகிறது. அந்த நபர் யார்? எதற்காக அந்த குடும்பத்துக்குள் வந்தார்? அந்த குடும்பம் விசித்திர மனிதரின் பிடியிலிருந்து தப்பியதா இல்லையா போன்ற கேள்விகளுக்கு விடைதான்கதை. த்ரில்லிங்... நகைச்சுவை, அர்த்தமுள்ள வசனங்கள், இனிமையான பாடல்கள், விறுவிறு சண்டைக்காட்சிகள், கிராபிக்ஸ் காட்சிகளோடு அனைத்து வயதினரும் ரசித்து மகிழும் வகையில் ஷூட்டிங் முடிந்து வெளிவர தயார் நிலையில் இருக்கிறது.

    ஒரு சீன்தான்

    ஒரு சீன்தான்


    மொத்தப் படமே ஒரு சீன்தான். அதை டெவலப்பண்ணி டெவலப் பண்ணி அருமையான குடும்பப் படமாக எடுத்திருக்கிறார் இயக்குநர்.

    கருத்துள்ள குடும்பக் கதை. இதில் நடிக்கிற எல்லாருமே ஹீரோதான். நான் அந்த குடும்பத்தில் மூத்த பையனாக நடிக்கிறேன்.

    எனது லட்சியம்

    எனது லட்சியம்

    என் ஃபேமிலியில் யாரும் நடிப்பு துறைக்கு வரல. என் தாத்தாவின் ஆசியோடு களத்தில் இறங்கியிருக்கேன். பெரிய நடிகராகனும் அதான் என் ஆசை, லட்சியம்.

    பொழுதுபோக்கு

    பொழுதுபோக்கு

    படங்கள் நிறைய பார்ப்பது. ஆன்லைன் ப்ளாக்ஸ் நிறைய படிப்பது. ரோல் மாடல் என்றால் அது நான் வியந்து பார்த்த ஹீரோ பாகுபலி பிரபாஸ்தான் என்று கூறி சிரிக்கிறார் முத்தையா.

    சபாஷ்.. நல்லா வாங்க, வளருங்க!

    English summary
    Yahena Ketten hero Muthaiah Kannadasan shares his experience in the deubt movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X