முரளிதரன் பயோபிக்கிற்கு வலுக்கும் எதிர்ப்பு.. விஜய் சேதுபதிக்கு எதிராக டிரெண்டாகும் புது ஹேஷ்டேக்!

By

சென்னை: விஜய் சேதுபதிக்கு எதிராக ட்விட்டரில், #TamilsTraitorVijaysethupathi என்ற ஹேஷ்டேக்கை ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர்.

Recommended Video

அரசியல் கலக்காமல் 800 படம் வந்தால் சரி | Muttiah Muralitharan-Vijay Sethupathi விவகாரம்

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் பயோபிக்கில் நடிக்க விஜய் சேதுபதிக்கு எதிர்ப்பு கிளம்பி வருகிறது.

தமிழ் அமைப்புகள் மற்றும் சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்தப் படத்துக்கு '800' என தலைப்பு வைத்துள்ளனர். 'கனிமொழி' படத்தை இயக்கிய எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்குகிறார். விஜய் சேதுபதி, முரளிதரன் பயோபிக்கில் நடிப்பது உறுதியானதை அடுத்து அவருக்கு எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. சமூக வலைதளங்களில் அவருக்கு எதிராக பலர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டது.

கடும் எதிர்ப்பு

கடும் எதிர்ப்பு

இதையடுத்து ஷேம் ஆன் விஜய் சேதுபதி என்ற ஹேஷ்டேக், ட்விட்டரில் ட்ரெண்டானது. பல்வேறு தமிழ் அமைப்புகளும் விஜய் சேதுபதிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இயக்குனர் பாரதிராஜாவும் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் வெளியிட்ட அறிக்கையில், தாங்கள் செய்யவிருக்கும் 800 என்ற படம் பற்றிக் கேள்விப்பட்டேன். முரளிதரனைப் பற்றிய பயோபிக் படமாக அது உருவாகப் போவதாக அறிந்தேன்.

சிரித்து மகிழ்பவர்

சிரித்து மகிழ்பவர்

நம் ஈழத்தமிழ்ப் பிள்ளைகள் செத்து விழுந்த போது பிடில் வாசித்தவர் இந்த முத்தையா. சிங்கள இனவாதத்தை முழுக்க முழுக்க ஆதரித்தவர். விளையாட்டு வீரனாக என்னதான் சாதித்தாலும், தன் சொந்த மக்கள் கொல்லப்பட்டபோது சிரித்து மகிழ்பவர் என்ன சாதித்து என்ன பயன்? எனவே அவர் படத்தில் அந்தப் படத்தில் நடிப்பதை தவிர்க்க முடியுமா பாருங்கள் என்று கூறியிருந்தார்.

கருத்து தெரிவிக்காமல்

கருத்து தெரிவிக்காமல்

இயக்குனர்கள், சீனு ராமசாமி, சேரன், பாடலாசிரியர் தாமரை உட்பட பலரும் அந்தப் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என்று கோரிக்கை வைத்திருந்தனர். சில அரசியல் அமைப்புகளும் இந்த கோரிக்கையை முன் வைத்துள்ளன. இதற்கிடையே நடிகை ராதிகா, சரத்குமார் ஆகியோர் விஜய் சேதுபதிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தமிழர்களின் துரோகி

தமிழர்களின் துரோகி

இதுபற்றி நடிகர் விஜய் சேதுபதி கருத்து ஏதும் தெரிவிக்காமல் இருக்கிறார். இந்நிலையில் ட்விட்டரில், தமிழர்களின் துரோகி விஜய் சேதுபதி #TamilsTraitorVijaysethupathi என்ற ஹேஷ்டேக்கை இப்போது டிரெண்டாக்கி வருகின்றனர். விஜய் சேதுபதிக்கு எதிராகவும் இந்தப் படத்தில் ஏன் அவர் நடிக்கக் கூடாது என்றும் பலர் இந்த ஹேஷ்டேக்கில் தெரிவித்து வருகின்றனர். சிலர் விஜய் சேதுபதிக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X