‘பிக்பாஸில் இம்முறை ஆட்களும் கம்மி.. நாட்களும் கம்மி.. தீயாய் பரவும் புதிய தகவல்.. ரசிகர்கள் ஷாக்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இம்முறை குறைந்த எண்ணிக்கையிலான போட்டியாளர்களே பங்கேற்க உள்ளார்கள் என புதிய பட்டியல் ஒன்று வெளியாகி வருகிறது.

Recommended Video

Bigg Boss Tamil Predicted Contestant Shalu Shammu Exclusive | Kamal Hassan

விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடந்த மூன்று சீசன்களுமே நல்ல வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து இந்த ஆண்டு பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி விரைவில் தொடங்க உள்ளது. கடந்த ஜூன் மாதமே தொடங்க வேண்டிய பிக்பாஸ் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சற்று தாமதமாகியிருக்கிறது.

அக்டோபரில்..

அக்டோபரில்..

இந்தி மற்றும் தெலுங்கு மொழியில் பிக்பாஸ் நிகழ்ச்சிகள் தொடங்கி ஒளிபரப்பாகி வரும் நிலையில் தமிழில் வரும் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.

மறுப்பு - அமைதி

மறுப்பு - அமைதி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க போகும் போட்டியாளர்கள் என கடந்த 2 மாதங்களாகவே பல நடிகர் நடிகைகளின் பெயர்கள் அடிபட்டு வருகிறது. அவற்றில் சிலர் தங்களின் பெயரை மறுத்து வருகின்றனர். சிலர் அமைதியாகவே இருந்து வருகின்றனர்.

12 போட்டியாளர்கள்

12 போட்டியாளர்கள்

இந்நிலையில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 3 சீசன்களில் இருந்தும் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, கடந்த சீசன்களில் 16 போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில் இந்த சீசனில் 12 போட்டியாளர்கள்தான் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

ஏகப்பட்ட கட்டுப்பாடுகள்

ஏகப்பட்ட கட்டுப்பாடுகள்

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சி வரும் அக்டோபர் 10ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இம்முறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. முழுக்க முழுக்க சோஷியல் டிஸ்டன்ஸிங்குடன்தான் போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.

80 நாட்கள் மட்டுமே

80 நாட்கள் மட்டுமே

இதுவரை சனம் ஷெட்டி, லக்ஷ்மி மேனன், ரியோ ராஜ் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்க போவது உறுதியாகியுள்ளதாகவும், மீரா மிதுன் சர்ச்சையில் சிக்கிய ஜோ மைக்கேல் வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இம்முறை பிக்பாஸ் நிகழ்ச்சி 80 நாட்கள் மட்டுமே நடைபெறும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயஸ்ரீ மறுப்பு?

ஜெயஸ்ரீ மறுப்பு?

ஆனால் நிகழ்ச்சி நல்ல டிஆர்பியுடன் சுவாரசியமாக சென்றால் நாட்கள் அதிகரிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. அதோடு இந்த ஆண்டு செய்திகளில் அதிகம் அடிபட்ட சின்னத்திரை பிரபலங்களான ஜெயஸ்ரீ மற்றும் ஈஸ்வரை பிக்பாஸ் நிகழ்ச்சி குழு அணுகியதாகவும் ஆனால் ஜெயஸ்ரீ பங்கேற்க மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

மருத்துவ சோதனை

மருத்துவ சோதனை

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தேர்வு செய்யப்பட்ட சுமார் 30 போட்டியாளர்களில் மருத்துவ சோதனைக்கு பிறகு 12 போட்டியாளர்கள் 15 நாட்கள் குவாரண்டைனுக்கு பிறகு பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி லக்ஷ்மி மேனன், ரியோ ராஜ், சஞ்சனா சிங், சனம் ஷெட்டி, ஷாலு ஷம்மு, ஷிவானி நாரயணன், கருண் ராமன், கரன், புகழ், வித்யுலேகா ராமன், கிரண், மதுவந்தி, ராதா ரவி, இர்ஃபானா, மனோ பாலா, ஷரன் ஷக்தி, அகில், கோபிநாத், ஆகியோருக்கு மருத்துவ சோதனை நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

சர்ப்ரைஸா?

சர்ப்ரைஸா?

இதனிடையே கருண் ராமன், அம்ரிதா அய்யர், ஷாலு ஷம்மு ஆகியோர் திடீரென நிகழ்ச்சியில் பங்கேற்க போவதில்லை மறுத்துள்ளனர். அவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு நீக்கப்பட்டார்களா? அல்லது இல்லை என கூறிவிட்டு சர்ப்ரைஸாக நிகழ்ச்சியில் இறக்கப்படுவார்களா அல்லது வைல்டு கார்டு என்ட்ரியாக வருவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X