துணிவு படத்தின் பாக்ஸ் ஆஃபிஸ் எவ்வளவு தெரியுமா?.. தயாரிப்பாளருக்கு என்ன லாபம்?

சென்னை: துணிவு படத்தின் பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர்.

அஜித்குமார் சிறுத்தை சிவா இயக்கத்தில் தொடர்ந்து நான்கு படங்களில் நடித்தார். இதனையடுத்து அவர் சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களின் மூலம் பெரிதும் கவனிக்கப்பட்ட ஹெச்.வினோத்துடன் கூட்டணி அமைத்தார். இதனால் இந்தக் கூட்டணி மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது.

முதல் படம் ரீமேக்

முதல் படம் ரீமேக்

சதுரங்க வேட்டை, தீரன் என முதல் இரண்டு படங்களும் தரமான படங்களாக கொடுத்ததால் அஜித்துடன் வினோத் இணையும் படங்கள் நிச்சயம் அருமையாக இருக்கும் என ரசிகர்கள் நினைத்தனர். முதல் படம் சொந்தக் கதையை இயக்குவார் என்று எதிர்பார்த்திருந்த சூழலில் பிங்க் படத்தின் ரீமேக்காக நேர்கொண்ட பார்வை உருவானது. படத்தை போனி கபூர் தயாரித்திருந்தார். சமூக அக்கறையுள்ள, பெண்களுக்கு தேவையான ப்டமாக நேர்கொண்ட பார்வை கருதப்பட்டாலும் படம் சுமாரான வரவேற்பைப் பெற்றது.

வலிமையுடன் இறங்கிய அஜித் - வினோத்

வலிமையுடன் இறங்கிய அஜித் - வினோத்

நேர்கொண்ட பார்வைக்கு அடுத்ததாக இரண்டாவது முறையாக வலிமை படத்தி இணைந்தனர் அஜித்தும், வினோத்தும். இந்தப் படத்தையும் போனி கபூரே தயாரித்தார். நேர்கொண்ட பார்வை போல் அல்லாமல் வலிமை வினோத்தே யோசித்த கதை என்பதால் இந்தப் படத்தில் ரசிகர்களுக்கான ட்ரீட் நிச்சயம் இருக்கும் என பலரும் எதிர்பார்த்தார். ஆனால் இந்தப் படம் போதிய வரவேற்பைப் பெறவில்லை. இருப்பினும் படம் வசூல் ரீதியாக சக்கைப்போடு போட்டது. அதுமட்டுமின்றி, வலிமை சிறந்த படம்தான் என்று இன்றும் சிலர் கூறிவருகின்றனர்.

பட்டையை கிளப்பிய துணிவு படம்

பட்டையை கிளப்பிய துணிவு படம்

இப்படிப்பட்ட சூழலில் வலிமை படத்துக்கு பிறகு அஜித் - வினோத் - போனிகபூர் கூட்டணி மீண்டும் துணிவு படத்தில் இணைந்தது. வங்கிகள் மக்களிடம் ஆடும் தகிடுதத்தங்களை வைத்து படம் உருவாகி திரையரங்குகளில் கடந்த ஜனவரி மாதம் வெளியானது. முதல் இரண்டு படங்களைவிட இந்தப் படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் துணிவு படம் சக்கைப்போடு போட்டது.

துணிவு படத்தின் பாக்ஸ் ஆஃபிஸ்

துணிவு படத்தின் பாக்ஸ் ஆஃபிஸ்

இந்நிலையில் துணிவு படத்தின் பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரம் குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, துணிவு படம் உலக அளவில் 201 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாகவும், தமிழ்நாட்டில் மட்டும் 118 கோடி ரூபாய்வரை வசூலித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. படத்தின் பட்ஜெட் 145 கோடி எனவும், இதில் படத்துக்கான பிஸ்னெஸ் மட்டுமே 180 கோடி ரூபாய்க்கும் மேல் நடந்திருப்பதாவும் ஒரு தகவல் உலாவுகிறது.

அதேசமயம் ஆந்திரா, தெலங்கானா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் துணிவு படம் சுமாரான வசூலையே ஈட்டியிருக்கிறது எனவும் சொல்லப்படுகிறது. எது எப்படியோ உலக அளவில் என்று பார்க்கும்போது நிச்சயம் துணிவு படம் மாபெரும் வெற்றி என்பதில் சந்தேகம் இல்லை என்கின்றனர் அஜித் ரசிகர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X