Kalanithi Maran -ரஜினிக்கு இரண்டு கார்கள்.. நெல்சனுக்கு நான்கு கார்கள்.. உற்சாகத்தின் உச்சத்தில் கலாநிதி மாறன்

சென்னை: Kalanidhi Maran (கலாநிதி மாறன்) ரஜினி மற்றும் நெல்சன் திலீப்குமாருக்கு கலாநிதி மாறன் கார்கள் பரிசளித்திருப்பது குறித்த புதிய தகவல் வெளியாகியிருக்கிறது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்த படம் ஜெயிலர். 2.0, தர்பார், அண்ணாத்த ஆகிய படங்கள் போதிய வரவேற்பைப் பெறவில்லை. இதன் காரணமாக கண்டிப்பாக ஒரு ஹிட் கொடுத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தார் ரஜினி. அதேபோல் நெல்சன் திலீப்குமாரும் பீஸ்ட் படத்தின் தோல்வியால் ஜெயிலர் மூலம் கம்பேக் கொடுக்க காத்திருந்தார்.

New information has come out about Kalanidhi Maran gifting cars to Rajini and Nelson Dilip Kumar

கம்பேக் கொடுத்த இருவர்: இப்படி எக்கச்சக்க எதிர்பார்ப்புகளோடு வெளியானது ஜெயிலர் படம். நெல்சன் திலீப்குமாரின் டார்க் காமெடி பக்காவாக ஒர்க் அவுட் ஆக; ரஜினிகாந்த்தின் மாஸும், க்ளாஸும் ரசிகர்களை கவர படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இதன் மூலம் ரஜினிகாந்த்தும், நெல்சன் திலீப்குமாரும் தரமான கம்பேக்கை கொடுத்துவிட்டார்கள் என்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறினர்.

வசூலிலும் மாஸ்: விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் படத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்திருக்கிறது. முதல் நாளிலேயே இந்திய அளவில் 49 கோடி ரூபாயை படம் வசூலித்ததாக கூறப்பட்டது. அதேபோல் ஒரு வாரத்தின் முடிவில் 375 கோடி ரூபாயை க்ராஸ் செய்துவிட்டதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்தது. தற்போது படம் 600 கோடி ரூபாய் க்ளப்பில் சேர்ந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் ரஜினியும், ரசிகர்களும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

ரஜினிக்கு கார்: கலாநிதி மாறன் ஜெயிலர் சக்சஸுக்கு பிறகு ரஜினிகாந்த்தை சமீபத்தில் நேரில் சந்தித்து செக் ஒன்றை கொடுத்தார்.அந்த செக் 100 கோடி ரூபாய்க்கானது என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இரண்டு பிஎம்டபிள்யூ கார்களை நிறுத்தி ரஜினிக்கு எது பிடித்திருக்கிறதோ அதை எடுத்துக்கொள்ள சொன்னார். ரஜினிகாந்த் பிஎம்டபிள்யூ எக்ஸ் 7 காரை தேர்ந்தெடுத்தார். அதன் விலை ஒன்றரை கோடி ரூபாய் ஆகும்.

New information has come out about Kalanidhi Maran gifting cars to Rajini and Nelson Dilip Kumar

நான்கு கார்கள்: ரஜினிக்கு கலாநிதி மாறன் பரிசு கொடுத்ததை அடுத்து நெல்சனுக்கு என்ன செய்யப்போகிறார் என்ற கேள்வி எழுந்தது. அனைவரும் எதிர்பார்த்தபடியே நெல்சனுக்கும் போர்ஷே கார் ஒன்றையும், செக் ஒன்றையும் பரிசாக கொடுத்திருக்கிறார். இந்தச் சூழலில் ரஜினிக்கு செய்தது போன்றே நெல்சனுக்கும் கலாநிதி மாறன் செய்தாராம்.

அதாவது பிஎம்டபிள்யூ, பென்ஸ், லம்போர்கினி, போர்ஷே ஆகிய நான்கு கம்பெனிகளிலிருந்து தலா ஒரு காரை நெல்சன் முன் நிறுத்தி எது வேண்டுமோ அதை தேர்ந்தெடுக்க சொல்ல; நெல்சன் இந்த போர்ஷே காரை தேர்ந்தெடுத்ததாகவும் அதன் விலை ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் என்றும் கூறப்படுகிறது. தற்போது இந்தத் தகவல் இணையத்தில் ட்ரெடாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X