சமந்தாவுடன் பழனிக்கு சென்ற 96 இயக்குநர்.. காரணம் என்ன தெரியுமா?

பழனி: முருகன் கோயிலுக்கு சென்ற நடிகை சமந்தாவுடன் 96 பட இயக்குநர் பிரேம் குமார் சென்றது தொடர்பாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னையை பூர்வீகமாகக் கொண்ட சமந்தா முதலில் தமிழ் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். நீதானே பொன் வசந்தம், கத்தி, அஞ்சான், என பல படங்களில் நடித்த அவர் தெலுங்கிலும் நடித்து தனக்கென மார்க்கெட்டை உருவாக்கினார். தெலுங்கில் நடித்தபோது நடிகரும், நாகார்ஜுனாவின் மகனுமான நாக சைதன்யாவுடன் காதலில் விழுந்து அவரையே திருமணம் செய்துகொண்டார்.

நாகசைதன்யாவுடன் சமந்தாவுக்கு ஏற்பட்ட பிரிவு

நாகசைதன்யாவுடன் சமந்தாவுக்கு ஏற்பட்ட பிரிவு

சில வருடங்கள் இருவரது திருமண வாழ்க்கையும் சிறப்பாக சென்றுகொண்டிருந்தது. ஆனால் திடீரென இருவரும் பிரிவதாக பரஸ்பரமாக அறிவித்துக்கொண்டனர். இதனால் ஒட்டுமொத்த திரையுலகமும் அதிர்ச்சியடைந்தது. திருமண முறிவுக்கு பிறகு சமந்தாவின் கேரியர் ஆட்டம் காணும் என பலர் ஆரூடம் கூறினர். ஆனால் அதன் பிறகுதான் அவரது க்ராஃப் உச்சம் சென்றது. கோலிவுட், டோலிவுட் என நடித்துக்கொண்டிருந்த சமந்தா ஹாலிவுட்டிலும் கால் பதித்திருக்கிறார்.

 சமந்தாவை தாக்கிய நோய்; சிகிச்சையிலிருந்து மீண்ட சமந்தா

சமந்தாவை தாக்கிய நோய்; சிகிச்சையிலிருந்து மீண்ட சமந்தா

இந்தச் சூழலில் அவருக்கு அடுத்த அடியாக மையோசிடிஸ் எனும் தோல் வியாதி வந்தது. இந்த செய்தியும் சமந்தாவின் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எப்படியாவது அவர் குணமடைந்துவிட வேண்டுமென அவரது ரசிகர்கள் வேண்டிக்கொண்டனர். சமந்தாவும் பல்வேறு சிகிச்சைகளை மேற்கொண்டார். நல்லபடியாக சிகிச்சை முடிந்த சூழலில் தற்போது அந்த நோயிலிருந்து மீண்டிருப்பது அவரது ரசிகர்களுக்கு நிம்மதியை கொடுத்திருக்கிறது.

பழனிக்கு சென்ற சமந்தா

பழனிக்கு சென்ற சமந்தா

இந்நிலையில் நடிகை சமந்தா இன்று பழனி மலை முருகன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அதோடு மட்டுமின்றி 600 படிக்கட்டுகளிலும் கற்பூரம் ஏற்றியபடி சென்றார். அவருடன் 96 பட இயக்குநர் பிரேம் குமார் உள்ளிட்டோரும் சென்றனர்.

வேண்டுதலுக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சமந்தா, "உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தேன். தற்போது கடவுளின் அருள் மற்றும் மருத்துவர்களின் ஆலோசனையால் ஊடல்நலம் தேறியிருக்கிறேன். எனவே வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக பழனி முருகன் கோயிலுக்கு வழிபாடு செய்ய வந்தேன்" என்றார்.

சமந்தாவுடன் இயக்குநர் பிரேம் சென்றது ஏன்?

சமந்தாவுடன் இயக்குநர் பிரேம் சென்றது ஏன்?

பழனி சென்ற சமந்தாவுடன் 96 இயக்குநர் பிரேம் எதற்காக செல்ல வேண்டுமென்பதுதான் ரசிகர்களின் பெரிய கேள்வியாக இப்போது இருக்கிறது. அதாவது, 96 படத்தை தெலுங்கில் ஜானு என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. அதில் சமந்தா நடித்திருந்தார், பிரேம்குமாரே இயக்கியிருந்தார். அந்தப் படத்திலிருந்தே இருவருக்கும் நல்ல நட்பு நீடித்துவருகிறது.

இதற்கிடையே பிரேம்குமார் அடுத்ததாக நடிகர் கார்த்தியை வைத்து படம் இயக்குவதற்கான வேலையில் இருப்பதாக கூறப்படுகிறது. அந்தப் படத்தில் சமந்தாதான் ஹீரோயினாக நடிக்கவிருப்பதாகவும், அந்த நட்பின் வெளிப்பாட்டால்தான் சமந்தாவுடன் பிரேமும் பழனிக்கு சென்றதாக தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X