ரெட் ஒயினா, அவரா..? காதலருக்கு பிரபல நடிகை லிப் லாக் முத்தம்.. வைரலாகும் போட்டோ!
சென்னை: பிரபல நடிகை தனது காதலருக்கு லிப் லாக் முத்தம் கொடுக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
இன்ஸ்டாவில் அடிக்கடி போட்டோ பதிவிடும் நடிகைகளில் ஒருவர், இந்தி நடிகை சாக்ஷி மாலிக்.
சில படங்களில் நடித்துள்ள இவர், பிரபல மாடல். பல விளம்பர படங்களில் நடித்துள்ள இவர், டெல்லியை சேர்ந்தவர்.

போம் டிக்கி டிக்கி
சினிமா வாய்ப்புக்காக மும்பையில் வசித்து வருகிறார். இந்தியில் வெளியான, சோனு கே டிட்டு கி ஸ்வீட்டி என்ற படத்தில், போம் டிக்கி டிக்கி என்ற பாடல் காட்சியில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் இவர். அந்த ஒரு பாடல் காட்சி, அவருக்கு பெரும் புகழைப் பெற்று தந்துள்ளது.
பாலோயர் எண்ணிக்கை
இந்தப் பாடல் வெளியான மறுநாளே, அவரது இன்ஸ்டாவில் பாலோயர்களின் எண்ணிக்கை மில்லியன் கணக்கில் அதிகரித்தது என்றால் பாருங்கள். இவர், இன்ஸ்டாவில் வெளியிடும் புகைப்படங்களுக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள், லைக்ஸ்களை குவிக்கின்றனர். பல ரசிகர்கள் ஜாலியான கமென்ட்களையும் பதிவிடுகின்றனர்.

காதலருடன் நெருக்கமாக
நடிகை சாக்ஷி, சந்துல் கடாரா என்பவரை காதலித்து வருகிறார். தொழிலதிபரான சந்துல் தயாரிப்பாளர். இருவரும் சில மாதங்களுக்கு முன் துபாய் சென்றனர். அங்கிருந்து தினமும் புகைப்படங்களாக பதிவேற்றி வந்தார் சாக்ஷி. ஒரு நீச்சல் குள போட்டோவில் தனது காதலருடன் நெருக்கமாக இருந்த போட்டோ வைரலானது.

பிராமிஸ் ரிங்
நடிகை சாக்ஷியின் காதலர் சந்துல், தங்கள் உறவை அடுத்தக் கட்டத்துக் கொண்டு செல்வதற்காக, 'பிராமிஸ் ரிங்'கை அணிவித்துள்ளார். 'ஒருநாள், பிராமிஸ் ரிங் அணிவிக்கிறேன் என்றார். சரி என்றேன். சமீபத்தில் இப்படியொரு அதிர்ச்சி கொடுப்பார் என்று எதிர்பார்க்கவில்லை எனக் கூறியிருந்தார் சாக்ஷி மாலிக்.

லிப் லாக் முத்தம்
இந்நிலையில் தனது காதலருக்கு லிப் லாக் முத்தம் கொடுக்கும் போட்டோவை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இதற்கு கேப்ஷனாக, ஃபிரைஸ், ரெட் ஒயின் அல்லது அவர் ? என்று கூறியுள்ளார். இதற்கு ரசிகர்கள் கண்டபடி கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்தப் புகைப்படம் வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











