Don't Miss!
- News
50+.. அதென்ன "கிரீம்".. ஜாடை வேற ஒரே மாதிரி.. நடுக்காட்டில் நின்ற கார்.. கதவை திறந்து பார்த்தால்.. ஐயோ
- Sports
2023ஆம் ஆண்டின் சிறந்த கேட்ச்.. எரிமலை போல் வெடித்த சூர்யகுமார்.. ஃபில்டிங்கால் ஆஃப் செய்த நியூசி
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க ஆசைப்படுறீங்களா? அப்ப இந்த உணவுகளை தெரியாமகூட சேர்த்து சாப்பிடாதீங்க!
- Automobiles
சைக்கிள், காருனு மக்கள் வாகனங்களை வாங்கி குவிக்க போறாங்க.. ஆட்டோமொபைல்ஸ் துறைக்கு சாதகமாக அமைந்த பட்ஜெட்!
- Technology
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
தமிழ் சினிமாவில் புதிய மிரட்டல் வில்லன்: இதனால்தான் விஜய் படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்தேன்!
சென்னை: அதர்வா முரளியின் நடிப்பில் உருவாகியுள்ள 'குருதி ஆட்டம்' ஆகஸ்ட் 8ம் தேதி வெளியாகிறது.
'8 தோட்டாக்கள்' படத்திற்குப் பிறகு ஸ்ரீ கணேஷ் இயக்கியுள்ள படம் தான் 'குருதி ஆட்டம்.'
இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஒரு மிரட்டல் வில்லன் என்ட்ரி கொடுக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
நாளை 'தி லெஜண்ட்' ரிலீஸ்.. அசுர வேகத்தில் விற்றுத் தீர்ந்த டிக்கெட்..650 தியேட்டரில் ஹவுஸ்புல்!

அதர்வா - ஸ்ரீ கணேஷ் கூட்டணி
2017ல் வெளியான '8 தோட்டாக்கள்' படத்தின் மூலம் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் ஸ்ரீ கணேஷ். வெற்றி ஹீரோவாக அறிமுகமான இந்தப் படம், விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து ஸ்ரீ கணேஷ் இயக்கியுள்ள 'குருதி ஆட்டம்' படத்தில் அதர்வா முரளி ஹீரோவாக நடித்துள்ளார். இத்திரைப்படம் ஆக்சன் பின்னணியில் வேற லெவலில் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

மிரட்டும் வில்லன்
'குருதி ஆட்டம்' படத்தில் அதர்வாவுடன் பிரியா பவானி சங்கர், ராதிகா, ராதாரவி ஆகியோரும் நடித்துள்ளனர், யுவன் இசையமைத்துள்ளார். இந்தப் படம் ஆகஸ்ட் 8ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகிறது. இந்நிலையில், இந்தப் படத்தின் வில்லனாக நடித்துள்ள வத்சனின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகிருந்தது. ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற இந்த போஸர், இணையத்திலும் வைரலானது.

எங்கேயும் எப்போதும்.
யாருப்பா இந்த வில்லன், பாலிவுட் இறக்குமதியா? என வத்சன் குறித்து கேள்விகள் எழுந்தன. அட அவரு யாரும் இல்லப்பா, இவரு தான் என்ற விளக்கம் தற்போது கிடைத்துள்ளது. 'எங்கேயும் எப்போதும்' படத்தில் ஜெய்-அஞ்சலி, சர்வானந்த்-அனன்யா ஜோடிகளுடன் மூன்றாவதாக ஒரு ஜோடியும் கவனம் ஈர்த்தது. பேருந்து பயணத்தின்போது ஒல்லியான தோற்றத்துடன், கல்லூரி மாணவிக்கு நூல்விடும் இளைஞனாக நடித்து அனைவரையும் கவர்ந்தவர் தான் இந்த வத்சன் என இப்போது தெரிய வந்துள்ளது. ..

மாஸ்டரில் வாய்ப்பு
லோகேஷ் கனகராஜ் - விஜய் கூட்டணியில் மெகா ஹிட்டடித்த 'மாஸ்டர்' படத்தில், தில்லான கல்லூரி மாணவனாக நடிக்கும் வாய்ப்பு வத்சனுக்கு கிடைத்துள்ளது.. ஆனால், 'குருதி ஆட்டம்' படத்தில் கொடூரமான மிருகம் போன்ற தோற்றத்தில் வில்லனாக நடிக்க வாய்ப்பு கிடைத்ததால், மாஸ்டரில் விஜய்க்கு எதிராக மோதமுடியாமல் போய்விட்டதாம். இதற்காக ஐந்து மாதங்கள் ஜிம்மில் பயிற்சிப் பெற்றதாகவும், அவர் கூறியுள்ளார்.

வருத்தமும் மகிழ்ச்சியும்
இதனிடையே, 'குருதி ஆட்டம்' படத்தில் அதர்வாவுடன் நடித்தது, மகிழ்ச்சியாகவும், சிறந்த அனுபவமாகவும் இருந்ததாக வத்சன் தெரிவித்துள்ளார். அதேபோல், இயக்குநர் ஸ்ரீ கணேஷ் சமீபத்திய பேட்டியில் எனது கடின உழைப்பை பாராட்டியது, ரொம்ப எமோஷனலாக இருந்ததாகக் கூறியுள்ளார். ஆனாலும், விஜய்யுடன் 'மாஸ்டர்' படத்தில் நடிக்க முடியாமல் போனதில் வருத்தம் தான் என்றும் வத்சன் தெரிவித்திருக்கிறார். இருந்தாலும் தமிழ் சினிமாவுக்கு நல்ல வில்லன் கிடைச்சிட்டாருப்பா!