கோ, குள்ளநரிக் கூட்டம் உள்ளிட்ட புதுப்படங்களின் டிவிடிகள் மதுரையில் ஏராளமாய் பறிமுதல் செய்யப்பட்டன.
கோ, குள்ளநரிக் கூட்டம் உள்ளிட்ட புதுப்படங்களின் டிவிடிகள் மதுரையில் ஏராளமாய் பறிமுதல் செய்யப்பட்டன.
மதுரை ஊமச்சிகுளத்தில் உள்ள சி.டி.க்கடைகளில் புதுப்பட சி.டி.க்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து நேற்று மாலை ஊமச்சிகுளம் போலீசார் மகாத்மாகாந்தி நகர் பகுதியில் உள்ள ஒரு சி.டி.க்கடையில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு கோ, விகடகவி, குள்ளநரிகூட்டம் உள்பட 152 புதுப்பட டிவி.டி.க் களை பறிமுதல் செய்து கடை ஊழியர்கள் ராஜா, குமரன் ஆகிய 2 பேரை கைது செய்தனர். அதேபோல எஸ்.ஆலங்குளம் பகுதியில் உள்ள ஒரு சி.டி.க்கடையில் 27 புதுப்பட டிவிடிகளை பறிமுதல் செய்து கடை ஊழியர்கள் பெரியகருப்பன், ஆனந்த் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
இதே பகுதியில் உள்ள மற்றொரு கடையில் புதுப்பட டிவிடிகள் மற்றும் ஆபாச சி.டி.க்கள் தயார் செய்யப்படுவதாக வந்த புகாரையடுத்து சோதனை செய்யப்பட்டது.
அங்கு 384 புதுப்பட டிவிடிகள் மற்றும் 53 ஆபாச சி.டி.க்கள், ஒரு கம்ப்யூட்டர், 5 செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்து கடை ஊழியர்கள் சரவணன், சதீஷ் ஆகியோரை கைது செய்தனர். மேலும் கடை உரிமையாளர் அனந்தகிருஷ்ணனை தேடி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











