Just In
- 13 min ago
ஆரியின் வெற்றி.. தர்மம் நின்று கொல்லும்.. கொன்றது.. குஷி மோடில் பிரபலம்.. தரமான செய்கை!
- 35 min ago
தனுஷ் படத்தில் நடிக்கும் சூர்யாவின் நண்பர்!
- 41 min ago
பத்து தல ஃபர்ஸ்ட் லுக் இன்று ரிலீஸ்.. கொண்டாட்டத்தில் சிம்பு ரசிகர்கள்
- 58 min ago
மகுடம் சூடிய ஆரி.. டிவிட்டரில் ட்ரென்ட்டாகும் ஹேஷ்டேக்.. கொண்டாடும் ரசிகர்கள்.. வேற லெவல்!
Don't Miss!
- News
"டெம்ப்ளேட்" ஒன்னுதான்.. ரஜினிக்கு போட்டது.. அப்படியே சசிகலாவுக்கு மாத்தி விட்டு.. பலே பாஜக!
- Finance
உணவு டெலிவரி மீதான ஜிஎஸ்டி வரி 18% இருந்து 5% ஆக குறைக்க வேண்டும்.. நிதிமைச்சர் முடிவு என்ன..?!
- Automobiles
2021 எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் காருக்கான ஆக்ஸஸரீகள் குறித்த முழு விபரம்!! எது எதை பொருத்தினால் கார் நன்றாக இருக்கும்
- Sports
ரூ. 20+ கோடி.. பல முக்கிய வீரர்களை வெளியிடும் சிஎஸ்கே.. வெளியான அந்த லிஸ்ட்.. இன்னும் 2 நாள்தான்!
- Lifestyle
கா்ப்பப்பை வாய் புற்றுநோய் பற்றி ஒவ்வொரு பெண்ணும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
புது முல்லை வந்தாச்சு? வைரலாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீன்.. சித்துவை மறந்து காவ்யாவை ரசிப்பார்களா?
சென்னை: விஜய் டிவியில் வெற்றிநடை போட்டு வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இனி இவர் தான் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
கடந்த டிசம்பர் 9ம் தேதி பிரபல விஜேவும் சின்னத்திரை நடிகையுமான விஜே சித்ரா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது கோலிவுட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
அரை டவுசரில் பக்காவா போஸ் கொடுக்கும் மஹிமா…காலுக்கு நடுவுல எதுக்கு நாய்..கலாய்க்கும் ரசிகர்கள் !
முல்லை கதாபாத்திரத்தை நிறுத்தி விடுங்கள் என ரசிகர்கள் கோரிக்கை வைத்த நிலையில், நடிகை காவ்யா அறிவுமணி புது முல்லையாக அறிமுகமாகி உள்ளார்.

பிரபலப்படுத்திய முல்லை
விஜே சித்துவாக இருந்த சின்னத்திரை நடிகை சித்ராவை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இடம்பெற்றுள்ள முல்லை கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்து பிரபலப்படுத்தியது. சித்ராவின் மரணத்தில் கூட பலரும் முல்லை இறந்து விட்டதாகவே பதிவுகளை இட்டு வந்தனர். முல்லை ஹாஷ்டேக்கும் டிரெண்டானது குறிப்பிடத்தக்கது.

முல்லை கதாபாத்திரம் வேண்டாம்
முல்லையாக இதுவரை சித்ராவை பார்த்து வந்த ரசிகர்கள், அவரது திடீர் மரணத்தால் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தை முடித்து விடுங்கள் என ஏகப்பட்ட ரசிகர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். ஆனால், கதையின் படி முல்லை கதாபாத்திரம் மிகவும் முக்கியமானது என்பதால் வேறு ஒரு நடிகையை நடிக்க வைக்க பாண்டியன் ஸ்டோர்ஸ் குழு தீவிரம் காட்டியது.

புது முல்லை
சீரியல்களில், இனி இவருக்கு பதில் இவர் என போடுவது காலங்காலமாக நடந்து வருகிறது. சிலர் அந்த சீரியலை விட்டு வேறு பணிகளுக்கோ அல்லது உடல் நலக் குறைவு காரணமாகவோ மாற்றப்படுவார்கள். சின்னத்திரை நடிகை சித்ரா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட நிலையில், இனி அவர் நடித்து வந்த முல்லை கதாபாத்திரத்தில் சின்னத்திரை நடிகை காவ்யா அறிவுமணி தான் நடிக்க உள்ளார் என்பது உறுதியாகி உள்ளது.

முல்லை ஃபர்ஸ்ட் லுக்
டிசம்பர் 23ம் தேதியுடன் சித்ரா முல்லையாக நடித்த காட்சிகள் நிறைவடைந்த நிலையில், புது முல்லையாக நடிகை காவ்யா அறிவுமணியை இன்றைய நிகழ்ச்சியில் விஜய் டிவி அறிமுகப்படுத்த உள்ளது. இந்நிலையில், தற்போது விஜய் டிவியின் ட்விட்டர் பக்கத்தில் காவ்யா அறிவுமணியை புது முல்லையாக அறிவித்து, அவரது ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு வைரலாக்கி உள்ளனர்.
மறக்க முடியவில்லையே
பாண்டியன் ஸ்டோர்ஸில் முல்லையாக நடித்துள்ள காவ்யா அறிவுமணியின் வீடியோ காட்சிகள் இன்ஸ்டாகிராமில் கசிந்து வைரலாகி வருகிறது. புது முல்லையை பார்க்கும் போது ரசிகர்களுக்கு மீண்டும் மீண்டும் சித்ராவின் நினைவுகளே வருவதாகவும், அவரது நினைவை அவ்வளவு எளிதில் மறக்க முடியவில்லையே என நெட்டிசன்கள் உருக்கமாக பதிவுகளை இட்டு வருகின்றனர்.

பாரதி கண்ணம்மா நடிகை
விஜய் டிவியில் பிரபலமாக ஓடி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வந்த சின்னத்திரை நடிகை காவ்யா அறிவுமணி தான் தற்போது மறைந்த சித்ராவுக்கு பதிலாக முல்லை கதாபாத்திரத்தில் ஏற்று நடித்து வருகிறார். காவ்யா அறிவுமணியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை தற்போது ரசிகர்கள் வேகமாக ஃபாலோ செய்து வருகின்றனர்.