பிபி அல்டிமேட் ...சிம்பு மட்டுமில்லீங்க... வைல்ட் கார்டு என்ட்ரியும் உண்டு... இவரா வருகிறாரு அடடே!

சென்னை : பிபி அல்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் நேரலையாக ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிகழ்ச்சியின் புதிய தொகுப்பாளராக கமலுக்கு பதிலாக சிம்பு இணையவுள்ளார்.

இதுமட்டுமின்றி வைல்ட் கார்ட் சுற்று மூலம் புதிய நபரும் நிகழ்ச்சியில் இணைகிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி

பிக் பாஸ் நிகழ்ச்சி

விஜய் டிவியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 5 சீசன்களை கடந்து ரசிகர்களின் அதிகமான ஆதரவில் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் பிக் பாஸ் அல்ட்டிமேட் நிகழ்ச்சி தினந்தோறும் 70 நாட்களுக்கு டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிப்பரப்பாக உள்ளது. தினந்தோறும் பரபரப்பான நிகழ்வுகளுடன் நிகழ்ச்சி நடந்து வருகிறது.

பிக்பாஸ் அல்ட்டிமேட் நிகழ்ச்சி

பிக்பாஸ் அல்ட்டிமேட் நிகழ்ச்சி

பிக் பாஸ் சீசன் 5 நிறைவடைந்த சில தினங்களில் இந்த நிகழ்ச்சி துவங்கியது. இந்த நிகழ்ச்சியையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்கினார். இந்நிலையில் மற்ற விஷயங்களுக்கு தன்னால் நேரம் ஒதுக்க முடியவில்லை என்று கூறி கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகியுள்ளார்.

புதிய தொகுப்பாளர் சிம்பு

புதிய தொகுப்பாளர் சிம்பு

இந்நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியை நடிகர் சிம்பு தொகுத்து வழங்கவுள்ளார். இந்த வாரத்தில் இருந்து அவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளதாக விஜய் டிவி மற்றும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஆகியவை தகவல் தெரிவித்துள்ளன. இதுகுறித்த பிரமோக்கள், சிம்புவின் லுக் உள்ளிட்டவை ஷேர் செய்யப்பட்டுள்ளன.

பிக் பாஸ் வீட்டிற்கு வரும் புதிய நபர்

பிக் பாஸ் வீட்டிற்கு வரும் புதிய நபர்

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் வைல்ட் கார்ட் மூலம் என்ட்ரி ஆகவுள்ளார் கலக்க போவது யாரு சதீஷ். பிக்பாஸ் அல்ட்டிமேட்டில் முதல் வைல்ட் கார்ட் என்ட்ரி இந்த வாரம் நிகழவுள்ள நிலையில், இதன்மூலம் சதீஷ் மட்டுமின்றி சுரேஷ் சக்ரவர்த்தியும் பிக் பாஸ் வீட்டில் நுழையவுள்ளார்.

கமலை தொடர்ந்த வனிதா

கமலை தொடர்ந்த வனிதா

நிகழ்ச்சி துவங்கி 24 நாட்கள் கடந்துள்ள நிலையில், தற்போது கமல் விலகியுள்ளார். அவரைத் தொடர்ந்து வனிதாவும் விலகியுள்ளார். நிகழ்ச்சியில் சிம்பு மற்றும் வைல்ட் கார்ட் என்ட்ரி நிகழவுள்ள நிலையில், இந்த மாற்றங்களை ரசிகர்கள் வரவேற்பார்களா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X