புதிய சிக்கலில் ‘செக்கச் சிவந்த வானம்’.. குறித்த தேதியில் ரிலீசாவது சந்தேகமே!
செக்கச் சிவந்த வானம் படத்திற்கு விலங்குகள் நல வாரிய அதிகாாிகள் தடையில்லா சான்று வழங்காததால் படம் குறித்த தேதியில் வெளியாகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
Recommended Video

சென்னை: விலங்குகள் நல வாரியம் தடையில்லா சான்று வழங்காததால், மணிரத்னத்தின் செக்கச் சிவந்த வானம் குறித்த தேதியில் ரிலீசாவதில் சிக்கல் எழுந்துள்ளது.
காற்று வெளியிடை படத்தை தொடர்ந்து மணிரத்னம் இயக்கியுள்ள படம் செக்கச் சிவந்த வானம். இப்படத்தில் அரவிந்த்சாமி, அருண் விஜய், சிம்பு, விஜய் சேதுபதி, ஜோதிகா என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.
இப்படம் வரும் வியாழன் அதாவது செப்டம்பர் 27ம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிக்கல்:
முன்னணி நடிகா்கள் பலா் இப்படத்தில் நடித்துள்ளதால் இப்படத்திற்கு ரசிகா்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில் இப்பட ரிலீசில் விலங்குகள் நல வாரியம் மூலம் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சான்றிதழ் வழங்க மறுப்பு:
அதாவது படத்தில் நாய்கள், ஆடுகள், கோழிகள் மற்றும் பறவைகள் சம்பந்தப்பட்ட காட்சிகள் வருகின்றன. காட்சி ஒன்றில் வளர்ப்புப் பிராணியான நாயின் கழுத்தில் கயிறு கட்டப்பட்டு இருக்கிறது. எனவே இப்படத்திற்கு தடையில்லா சான்று வழங்க முடியாது என விலங்குகள் நல வாரியம் மறுத்துள்ளது.

சந்தேகம்:
ஏற்கனவே இதே காரணத்தை சுட்டிக்காட்டி செக்கச்சிவந்த வானம் படத்திற்கு NOC சான்றிதழ் வழங்க விலங்குகள் நலவாரியம் மறுத்திருந்தது. தற்போது மீண்டும் அதே காரணத்திற்காக தடையில்லா சான்று வழங்க அதிகாரிகள் மறுத்துள்ளனா். இதனால் செக்கச் சிவந்த வானம் படம் குறித்த தேதியில் வெளியாகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

விஷால் படம்:
செக்கச் சிவந்த வானம் மட்டுமின்றி, விஷால் நடிப்பில் உருவாகியுள்ள சண்டகோழி - 2, ஜோதிகாவின் காற்றின் மொழி உள்ளிட்ட படங்களுக்கும் விலங்குகள் நல வாரியம் தடையில்லா சான்று வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











